Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனங்களைப் பிரித்து நாட்டைப் பிளவுபடுத்திப் பகைமையை வளர்ப்பதற்குச் சில உலக நாடுகள் முயற்சிக்கின்றன. ஆயினும் அவற்றை வெற்றிகரமாக முறியடித்துச் சகல இன மக்களும் ஐக்கியமாக வாழும் இலங்கையை எம்மால் கட்டியெழுப்ப முடிந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

நுவரெலியா அல் கபீர் ஜும்ஆ பள்ளிவாசலை நேற்று முந்தினம் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்தப் பள்ளிவாசலைக் கட்டியெழுப்புவதன் மூலம் முஸ்லிம்கள் திருப்தியடைய முடியாது. உண்மையான இஸ்லாம் என்றால் நபிகள் நாயகத்தின் போதனைகளை ஏற்று அதன் படி வாழ வேண்டியதன் அவசியத்தை இங்கு மத போதனை செய்த தலைவர்கள் குறிப்பிட்டனர். முஸ்லிம்கள் என்ற ரீதியில் உலகுக்குச் சேவை செய்தல் சகல இன மக்களுடனும் சமாதானம் ஐக்கியத்துடன் வாழ்தல் போன்ற விடயங்கள் அவரது போதனைகளில் அடங்குகின்றன.

இதனை அடித்தளமாகக் கொண்டு சகல இன மக்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டிய அவசியம் எமக்குள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை மிக நீண்டகாலங்களாக சிங்கள தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். மலை நாட்டை ஆட்சி செய்த மன்னர்களும் முஸ்லிம் மக்களுக்கு விசேட வரப்பிரசாதங்களை வழங்கியுள்ளனர். அவர்களை மலை நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் குடியமர்த்தியுள்ளனர். இதனை நாம் வரலாற்றில் பார்க்க முடிகிறது.

அதேபோன்று வெளிநாட்டு ஏகாதி பத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புகளின்போது முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களின் பக்கம் நின்று ஆதரவு நல்கியுள்ளனர். இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தபோதும் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுப்பதிலும் பங்களிப்பு செய்தனர். அதேபோன்று பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்க மேற்கொண்ட நடவடிக் கைகளிலும் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவு எமக்கு மிகுந்த பலமாக அமைந்தது.

வரலாற்றுக் காலத்திலிருந்து முஸ்லிம் மக்கள் இவ்வாறு செயற்பட்டு வந்துள்ளமை இந்த நாட்டின் மீது அவர்கள் முழுமையான அன்பைச் செலுத்தியதால் தான் உலகில் சிலர் இத்தகைய மக்களை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. ஒன்றாக வாழ அவர்களுக்கு விருப்பமில்லை.

சில நாடுகள் இனங்களைப் பிரித்து நாடுகளைப் பிரித்து பகைமையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இதனை நன்கு இனங்கண்டு உணர்ந்து நாம் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் எம்மால் வாழமுடிகின்றது.

எனது சமயமான பௌத்த சமயத்தில் புத்த பகவான் மிருகங்களுக்கிடையில் பேதங்கள் வேறுபாடுகள் நிலவினாலும் மனிதர்களுக்கிடையில் பேதங்கள் இருக்கக் கூடாது என்பதைப் போதித்துள்ளார். இதன் மூலம் எங்கே பிறந்தாலும் மனிதர்கள் மனிதர்கள் தான் என்பதையே அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் காரணத்தாலேயே எமது நாட்டிலும் சகல இன மத மக்களும் ஐக்கியமாக ஒன்றிணைந்து வாழ வழிசமைக்கப்பட்டுள்ளது என்றார்.

0 Responses to இலங்கையை பிளவுபடுத்த உலக நாடுகள் முயற்சி மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com