இரண்டு பிள்ளைகளை இழந்து நிற்பதற்கு ஓர் அன்னையினால் முடியாது. அவரை காப்பாற்றுவதற்கு சகலரும் முன்வாருங்கள். எனது மூத்த மகனுக்கு நடந்தது போன்று இரண்டாவது மகனான பிரேம்குமார் குணரட்ணவிற்கும் நடந்துவிடுமோ என்று அச்சமாய் இருக்கின்றது என்று அவரது தாயார் வீ.ஆர்.குணரட்ணம் தெரிவித்தார்.
கோட்டை தலவத்துகொடையில் அமைந்துள்ள முன்னணி சோஷலிஸக் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
நான் ஓய்வுபெற்ற ஆசிரியை, கேகாலை பிரதேசத்தில் பிறந்து அங்கேயே கல்வி பயின்று தொழில்செய்தேன். பிள்ளைகளுக்கு நல்லமுறையில் கல்வியை பெற்றுக் கொண்டேன். மகன்மார் இருவரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்திற்கு உள்நுழைந்தனர். அங்கு அவர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அவைதொடர்பில் எனக்கு மேலதிகமான தகவல் தெரியாது.
1989 ஆம் ஆண்டு எனது மூத்த மகன் ரஞ்சித் குணரட்ணத்தை இதேமாதிரி கடத்திச்சென்றனர். அவரை எவ்வளவுகாலம் தடுத்துவைத்திருந்தனர் என்று எனக்கு தெரியாது. அவரை காணாமல் செய்தனர். எனினும் அவர் எங்கேயாவது இருந்து அம்மா என்று அழைத்துக்கொண்டுவருவார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
எனினும் இன்று எனது இரண்டாவது மகனையும் அதேமாதிரி கடத்திச்சென்றுள்ளனர். இவருக்கு மூத்தமகனுக்கு நடந்தது போன்று ஏதாவது நடந்துவிடும் என்ற அச்சம் என்னிடமிருக்கிறது.
அதனால் அம்மா என்ற வகையில் நான் எல்லோரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். மகனை காப்பாற்றுவதற்கு தலையிடுங்கள். இரண்டு பிள்ளைகளை இழந்து நிற்பதற்கு ஓர் அன்னையினால் முடியாது. அதனால் சர்வதேச பிரஜைகள் உள்ளிட்ட சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றேன் இந்த நாட்டிற்காக எனது மகனை மீட்டெடுத்து தாருங்கள்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பிரேம்குமார் குணரட்ணத்தின் இளைய சகோதரி கருத்து தெவிக்கையில்,
எனது அண்ணன் 06 ஆம் திகதி அரசாங்கத்துடன் தொடர்புடைய பிரிவினரால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். அவர் தொடர்பில் இதுவரையிலும் எவ்விதமான தகவல்களும் இல்லை.
இந்த நாட்டின் மீது அன்பு செலுத்தியது தான் அண்ணா செய்த பாரிய தவறாகும்.
நாட்டிற்காக ஏதாவது மாற்றத்தை செய்யவேண்டும் என அர்ப்பணித்தார். அதனால் அதனை விரும்பாதவர்கள் அவரை பலியெடுப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
என்னுடைய மூத்த சகோதரன் ரஞ்சித் குணரட்ணம் இதேமாதிரி 1989 ஆம் ஆண்டு கடத்திச்செல்லப்பட்டார். அவரை அம்மா முன்னிலையிலும், என்முன்னிலையிலும் வதைப்படுத்தினர்.
பிரேம்குமார் அண்ணாவுக்கு அதேமாதிரியான நிலைமை ஏற்பட்டிருக்கும் என்று அஞ்சுகின்றோம். அண்ணா ஏதாவது குற்றஞ்செய்திருந்தால் அவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொறுப்பானவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
அண்ணனின் பிள்ளைகள் அப்பா தொடர்பிலான தகவல்களை கேட்கின்றனர். அவர்களுக்கு நாம் என்ன கூறுவது. அதேபோல் அண்ணனின் மனைவி கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகைதந்தபோது அவருக்கு பல்வேறு இடைஞ்சல்களை கொடுத்தனர்.
விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்தினர். நாட்டிற்காக அண்ணனை மீட்டெடுப்பதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை எம்முடன் கைகோர்க்குமாறு அழைக்கின்றோம்.
0 Responses to மூத்த மகனுக்கு நடந்தது போல் இளைய மகனுக்கும் நடந்துவிடுமோ...