வெரித்தாசில் இருந்து வெறியூட்டினாய்
சாராயம்தான் வெறியூட்டுமென
தெரியாத தமிழர் வீழ்ந்தனர்
கள்ளமறியா வன்னி மக்களின் கடிதங்களை
கையில் எடுத்து களம்புகுந்தாய்
குளறி அழுது பணம் சேர்த்தாய்.
சேர்த்த பணமெல்லாம் சேர முடியாமல்
போனதென்றாய்… சாமி நீ ஆ… ஆ….
சாமி ஆனாய்..
உன் முகமே உன்னைச் சொல்கிறதே
வேண்டாமென்று சொல்லச் சொல்ல
அழைத்து வந்து அலற வைத்தனர்..
அஞ்சு வருச ஐரோப்பா வரலாறு தெரியாத
வெளிநாட்டு பேதைகள் பேச்சுக் கேட்டு
உன்னை நம்பிய என் மண்ணை
என்னத்தால் அடிப்பேன் என் செய்வேன்
முள்ளு வாய்க்கால்களை நம்பி
முள்ளிவாய்க்கால் போனோமே
உனக்கு கடிதம் எழுதியோரின்
மூச்சடைச்சு
மூன்றாண்டையா…
திருவாசகம் வெளியிட்டீராமே.. வானலையில்
நீர் பாடிய திருவாசகத்தை வெல்ல
வான்கலந்த மாணிக்க வாசகனாலும்
முடியாதையா…
வெரித்தாஸ் கேட்டு உனக்கு கடிதம்
எழுதியவன்.. நான் – இனியும் உன்
வெரித்தாஸ் கேட்க நான்
வெறி தாஸ் இல்லை சாமி..
0 Responses to மே 18 | மறக்க முடியாத மனிதர்கள் | கஸ்பராஸ் சாமி