சிறீலங்காவில் இனவாதத்தை உசுப்பேற்ற வெற்றி விழா நடாத்தும் சிங்கள அரசு அமெரிக்காவில் மானங்கெட்டு நிற்பதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
இது குறித்த செய்தி வருமாறு:
அமெரிக்காவை திருப்திப்படுத்துவதற்காகவே ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றிய தமரா குணநாயகம் பதவி விலக்கப்பட்டடு கியூபாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சாட்டியுள்ளது.
தமரா குணநாயகத்தை கியூபாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் ஜே.வி.பியினரின் அரசியல் அதிகார மட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது அதன் போதே ஜே.வி.பி இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளது.
இதன் போது தலைவர் சோமவன்ச அமரசிங்க கருத்து தெரிவிக்கையில், மே 18 திகதி விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து மூன்றாண்டு வெற்றியை காலிமுகத்திடலில் இலங்கை அரசாங்கம் கொண்டாடும் அதேவேளை வெளிவிவகார அமைச்சர், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனைச் சந்தித்து, மிக இரகசியமாக அரசின் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.
அரசின் இச்செயலானது அரசாங்கத்தின் போலி முகத்தை தெளிவானமுறையில் படம்பிடித்துக்காட்டுவதாக அமைகின்றது. இருப்பினும் தம்மிடம் தரவிருக்கும் செயற்திட்ட அறிக்கையினை தமக்கு காண்பிப்பதற்கு முன்னர் அதனை இலங்கை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா தெரிவித்திருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த விஜித ஹேரத், இருப்பினும், அதனை செய்வதில் இலங்கை அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை. அத்துடன் அமெரிக்காவைத் திருப்பிதிப்படுத்துவதற்காகவே தமரா குணநாயகம் கியூபாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான செயற்பாபடுகளால் மனிதஉரிமை மீறல் குற்றங்களில் இருந்து தப்பிப்பித்துக் கொள்ளலாம் என்பதற்கான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்றது என மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
0 Responses to சிறீலங்காவில் வெற்றி விழா அமெரிக்காவில் தோல்வி விழா