Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைந்து நினைவேந்தல் வாரம் தொடங்கியுள்ள நிலையில் கனடா-ரொற்ன்ரோவில் முள்ளிவாய்க்கால் நினைவகம் உணர்வுபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தி மே 12 முதல் நினைவேந்தல் வாரமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடந்தாண்டு பிரகனடப்படுத்தியிருந்தது.

இததொனரு அங்கமாக நினைவேந்தல் வாரத்தில் மக்கள் தத்தமக்கு வசதியான வசிதிகளுக்கு அமைதியாக உணர்வுபூர்வமாக தமது வணக்கத்தினை செலுத்த ரொறன்ரோவில் உள்ள 2761 மார்க்கம் வீதியில் உள்ள சண்சிட்டிப் பிளாசாவில் 'முள்ளிவாய்க்கால் நினைவகம்' திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நினைவகத்தில் 'முள்ளி வாய்க்காலில் உறுதி எடுப்போம்' எனும் முழக்கத்தின் கீழே மக்கள் தமது கையொப்பங்களை இட்டு உறுதி கொள்ளும் பலகையொன்றும் நிறுவப்பட்டுள்ளது.

இதனையொட்டி கனடாவில் இடம்பெறும் நினைவேந்தல் வார முன்னெடுப்புகள் தொடர்பில் கடந்த 11 ம் நாள் ஊடகவியலாளர் மாநாடொன்றும் இடம்பெற்றுள்ளது.

மார்க்கம் நகரசபை உறுப்பினர் திரு லோகன் கணபதி பொதுச்சுடரினை ஏற்றி இந்நிகழ்வினைத் தொடக்கி வைத்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர் வின் மகாலிங்கம் நிகழ்வினை நெறிப்படுத்த, தொடர்ந்து நா.க.அரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம், சபாநாயகர் பொன் பாலராஜன், நா.த.அரசாங்கத்தின் அவை உறுப்பினர்கள் ஈழவேந்தன், ஐயம்பிள்ளை சண்முகநாதன், கனடியத் தமிழர் பேரவை (CTC ) உபதலைவி யுவனிரா நாதன், படைப்பாளிகள் கழகத் தலைவா வேலுப்பிள்ளை தங்கவேலு, கனடாத் தமிழர் இணையப் பிரமுகர் ஆ .தியாகலிங்கம், திருகோணமலை நலன்புரிச் சங்கப் பிரமுகர் வீரசுப்பிரமணியம், பருத்தித்துறை மக்கள் ஒன்றியப் பிரமுகர் வீர விஜேந்திரா, உட்பட பலரும் பங்கெடுத்து உணர்வுளை பகிர்ந்து கொண்டனர்.

12 ம்,13 ம் திகதிகளில் கனடா ஐயப்பன் ஆலயத்தில் ஆத்ம சாந்திக்கான மகா யாகம்

13 ம் திகதி 3500 மக்நிக்கல் அவென்யுவில் உள்ள கிறிஸ்த்தவத் தேவாலயத்தில் நடைபெறும் ஆராதனைகள்.

17 ம் திகதி மாலை 7.15 மணிக்கு MIDLAND - KINGSTON சந்திப்பில் உள்ள தமிழ்க் கத்தோலிக்க மரியன்னை பங்குத் தேவாலயத்தினால் ஒழுங்கு செய்யப்படும் ஆராதனை நிகழ்வு

18 ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணியில் இருந்து 8 மணி வரை ரொறொன்ரோ குயின்ஸ் பாக்கில் நடைபெறவிருக்கும் அனைத்துத் தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவில் தமிழீழத் தேசியத் துக்க நாள் நிகழ்வு

மற்றும் ஒழுங்கு செய்யப்படுகின்ற இஸ்லாமியப் பிராத்தனைகள் மற்றும் இரத்த தானங்கள் போன்றவை கனடாவில் இடம்பெறுகின்றன.

0 Responses to முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்! கனடாவில் முள்ளிவாய்க்கால நினைவகம் திறந்து வைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com