முன்னாள் இராணுவத் தளபதி விடுதலை செய்யப்பட்டமை மகிழ்ச்சியான விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுதலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
சரத் பொன்சேகா ஒரு அரசியல் கைதி என்று குறிப்பிட்ட சம்பந்தன் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் அரசியல் காரணங்களுக்காக சோடிக்கப்பட கதைகள் என்றும் கூறினார்.
சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்டபோது சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக பல வழக்குகள் தொடுக்கப்பட்ட அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அந்த தண்டனைகள் நியாயமற்றது. அதனை கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. எவ்வாறாயினும் சரத் பொன்சேகா தற்போது விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்சியானது என சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.
0 Responses to பொன்சேகா விடுதலை செய்யப்பட்டமை மகிழ்ச்சி | சம்பந்தன்