Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெண்கள் மனதில் இடம்பிடித்து ஆண்களை 7 வருடமாக இம்சை செய்த தொடர் கோலங்கள். இத்தொடரின் உதவி இயக்குனர் அன்பு. இவர் இளம்பெண்களை விபச்சாரத்திற்கு பயன்படுத்துவதாக வடபழனி காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா தலைமையில் கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் எம்.சுதாகர் மேற்பார்வையில் விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் கிங்ஸ்லின், இன்ஸ்பெக்டர் சான்டியாகோ ஆகியோர் கொண்ட தனிப்படையுடன் இருந்த போலீசார் அன்புவை கண்காணித்து வந்தனர்.

இன்று (24.05.2012) காலை வடபழனியில் உள்ள புகழ்பெற்ற சைவ ஓட்டல் வாசலில் விபச்சாரத்திற்கான இளம் பெண்களை வரவழைத்துவிட்டு அன்பு நின்றிருந்தார். அவருடன் வாடிக்கையாளர்கள் போல ஏற்கனவே பேசி தொடர்பில் இருந்த போலீசார், அங்கு அதிரடியாக நுழைந்து அன்புவை சுற்றி வளைத்தனர். அன்புவையும் அவருடன் இருந்த பெண்களையும் பிடித்தனர். பிடிப்பட்ட பெண்கள் மைலாப்பூர் மகளிர் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அன்புவை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். அன்பு பிரபல டிவி தொடரான கோலங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்ததுடன் சில சினிமா படங்களில் உதவி இயக்குனராகவும் மேடைக் கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தியும் வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

கோடம்பாக்க வட்டாரத்தில் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-சேது.

0 Responses to பிரபல டிவி டைரக்டரின் உதவியாளர் விபச்சார வழக்கில் கைது! கோடம்பாக்கத்தில் பரபரப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com