Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அகற்ற இந்திய மத்திய அரசு ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண் ருட்டி ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவரது விவாதத்தில் மேலும் தெரிவித்ததாவது – இலங்கையில் வடக்கு, கிழக்கில் வசிக்கும் மக்கள் பெரும் துயரங்களை அனுபவிக்கின்றனர். இராணுவத்தினர் அங்கு பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அன்றாடப் பணிகளைக் கூட அவர்களால் செய்ய முடிவதில்லை. எனவே, மத்திய அரசை வலியுறுத்தி இலங்கை தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவத்தை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் வெளிநாடுவாழ் தமிழருக்கு உதவுவதற்காக தனி அமைச்சக மொன்றை ஏற்படுத்த வேண்டும். வெளிநாடுவாழ் மலையாள மக்களின் நலனுக்காக கேரளத்தில் தனி அமைச்சகம் செயற்பட்டு வருகிறது. அதேபோல வெளிநாடுவாழ் தமிழருக்கு உதவ வெளிநாடுவாழ் தமிழர் விவகாரத்துறை அமைச்ச கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

0 Responses to வடக்கில் இராணுவத்தை வெளியேற்ற இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com