தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலிறுத்தி எதிர்வரும் 29ம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன அறிக்கையொன்றினை விடுத்துள்ளார்.
தற்போது தமிழ் அரசியல் கைதிகளது உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், அவர்களுக்கு உரிய தீர்வு ஒரு மாத காலத்திற்கள் வழங்கப்படும் என அரசு கூறிய வாக்குறுதிகளை குறித்த காலப்பகுதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலுயுறுத்தி வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் எதிர்வரும் 29ம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்த நவ சம சமாஜக் கட்சி திர்மானித்துள்ளதாக அறிக்கையொன்றினையும் விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆயுதம் தூக்கியவர்களை தமிழ் அரசியல் கைதிகள் என்று சொல்ல முடியாது அவர்களை பயங்கரவாதிகள் என்றே கூற வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் நாடாளமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு அவர்களை அடையாளம் காண்பாரானால் இலங்கையில் இன்றைய அரசியல் தளத்தில் உள்ளவர்களில் பலர் பயங்கரவாதிகளாக அடையாளம் காணப்படுவர்.
அதனடிப்படையில் இந்த நாட்டில் நடைபெற்ற இந்த நாட்டில் 1971 இல் தென்னிலங்கையில் ஆயுதப் போராட்டம் நடந்துள்ளது. 1988 இலும் ஆயுதப் போராட்டம் நடந்துள்ளது. இப் போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டும் உள்ளனர்.
அதில் பலர் தற்போது அரசியல் கட்சிகளில் முக்கிய தலைவர்களாக உள்ளனர். அத்துடன் இலங்கை நாடாளுமன்றத்தில் இவர்களில் அநேகர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
எனவே அரசு பொறுப்பற்ற விதத்தில் விமர்சனங்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் உரிய தீர்வினை வழங்க வேண்டும் என இக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 29ம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நடைபெறவுள்ள போராட்டத்திற்கு சகலரினதும் ஒத்துழைப்பையும் வழங்குமாறும் நவ சம சமாஜக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த போராட்டத்தை நவ சம சமாஜக் கட்சியுடன் இணைந்து, முன்னிலை சோஷலிசக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, சோஷலிசக் கட்சி, தியச கல்வி வட்டம், ஜனநாயக செயற்பாட்டு மையம் என்பவை ஒன்றிணைந்துஇப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இன்றும் கூட தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை ஏற்க மறுக்கும் ஆட்சியாளர்கள் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக பயங்கரவாத முத்திரையைக் குத்தி தமிழ் மக்களின் மனங்களைக் காயப்படுத்தும் முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே அரசின் இவ்வாறான செயற்பாடுகளால் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் தீர்வு தொடர்பில் வலுவான போராட்டங்கள் அவசியமாகின்றது. இதனால் எதிர்வரும் 29ம் திகதி நடைபெற இருக்கும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நவ சம சமாஜக் கட்சி எதிர்பார்ப்பதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Responses to ஆயுதம் தாங்கியுள்ள அனைவருமே பயங்கரவாதிகளே | விக்கிரமபாகு