Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உக்ரேன் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கை கலப்பு உலக மன்றில் அந்த நாட்டை சிரிப்பாய் சிரிக்க வைத்திருக்கிறது.

உக்ரேன் ஜனநாயக அழிப்பு சக்தி அதிபரான விக்டர் ஜங்கோவிஜ்சின் கட்சியினர் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த சட்டமூலம் ஒன்றே மோதலுக்கு காரணமானது.

மேலை நாடுகளை பகைத்த உக்ரேன் அதிபர் தனது பதவி நாற்காலியை காப்பாற்ற ரஸ்யாவின் ஆதரவை பெற முயன்று, அதற்காக கொண்டுவந்த மோசமான சட்டமே எதிர்ப்பை சந்தித்து.

இனி உக்ரேன் நாட்டில் முதல் மொழியாக உக்ரேனிய மொழி இருக்க இரண்டாவது மொழியாக ரஸ்ய மொழி இருக்கும் என்று கொண்டுவந்த சட்டமே எதிர்ப்பைத் தேடி சபாநாயகருக்கு சுண்டல் அடிபோட காரணமானது.

பாராளுமன்றத்தில் அடி – இடி – குத்து என்று அமர்க்களம் தூள் கிளப்பியது.

ஏற்கெனவே ஐரோப்பிய ஒன்றியத்தை பகைத்து முடித்துவிட்டது உக்ரேன்.

அந்த நாட்டின் முன்னாள் பெண் அதிபரை ஏழு வருடம் சிறையில் போட்டு அரசியல் பழிவாங்களை ஆரம்பித்துள்ளதால் இந்தப் பகை மூண்டுள்ளமை தெரிந்ததே.

இதன் காரணமாக நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் அங்கு நடைபெறவுள்ள ஐரோப்பா கிண்ண உதைபந்தாட்ட போட்டிக்கு ஐரோப்பிய நாட்டு பிரதிநிதிகள் உத்தியோக பூர்வ விஜயங்களை மேற்கொள்ள இயலாது என்று அறிவித்துள்ளது.

ஐரோப்பா கிண்ண உதைபந்தாட்டப் போட்டியானது போலந்து – உக்ரேன் ஆகிய இரு நாடுகளில் நடைபெற இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நேற்றைய முடிவின்படி உக்ரேனில் நடைபெறும் இறுதி ஆட்டத்திற்கு போகாது ஐரோப்பிய தலைவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளார்கள்.

மனித உரிமை மீறல், நீதிமன்றத்தை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தல் போன்ற கருங்காலி வேலைகளை நிறுத்தாவிட்டால் உக்ரேனுடன் அஸோசியேட் தர வார்த்தகத்தை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தும் என்றும் காட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசாங்கம் வன்னியில் குண்டுகளை கொட்டிய விமானங்களின் விமானிகளாக பல உக்ரேனியர் போனதாகக் கூறப்படுகிறது.

சிறீலங்காவுக்கு உதவிய ஒரு நாடு இப்போது சிறீலங்கா போலவே சந்திக்கு வந்துள்ளது.

0 Responses to உக்ரேன் பாராளுமன்றில் உதை | குத்து | கடாசி உழக்கு..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com