Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது மாகாண சபை உறுப்பினராகவோ பதவியேற்க முடியாது என சட்டமா அதிபர் ஈவா வனசுந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவோ அல்லது அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடவோ முடியாது என அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள போதிலும், நாட்டு அரசியலமைப்பின் பிரகாரம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ முடியாது.

ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு என்பது சரத் பொன்சேகாவின் சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தை மட்டுமே குறைத்துள்ளது. ஆயினும் அவரின் சிறைத் தண்டனைக்கான காலம் குறைக்கப்படவில்லை.

இந்நிலையில், சரத் பொன்சேகாவின் சிறைத் தண்டனைக்கான காலம் குறைக்கப்பட்டால் மட்டுமே, அவர் அரசியலில் ஈடுபட முடியும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஏழு ஆண்டுகளுக்கு பொன்சேகா தேர்தலில் போட்டியிட முடியாது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com