பலமுள்ளது வாழும் என்ற டார்வினின் கோட்பாட்டைப் போல கூகுள் என்ற பகாசுர இணைய நிறுவனம் உலகின் மற்றய நிறுவனங்களை தொடர்ந்தும் விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறது.
யாராவது இணைய உலகில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தால் அந்த நிறுவனத்தை கோடான கோடிக்கு வாங்கிவிடும் கூகுள் நிறுவனம்.
அப்படி வாங்கிவிட்டு அதையே தான் நடாத்துமா என்றால் அதுதான் இல்லை.. தந்திரமாக அதை அழித்து முகவரி இல்லாமல் செய்துவிடும்.
இன்று அமெரிக்காவில் உள்ள மோற்றறோலா மொபிலிற்றி நிறுவனத்தை 72 பில்லியன் குறோணருக்கு வாங்கி ஏப்பம் விட்டுள்ளது.
மோற்றறோலா முன்னர் கைத்தொலைபேசிகளை வெளியிட்டு வந்தமை தெரிந்ததே, இந்த நிறுவனம் தற்போது கைத்தொலைபேசிகளின் உட்கட்டுமான உபகரணங்களை உற்பத்தி செய்கிறது.
ஆனால் இதனுடைய தயாரிப்புக்கள் கூகுளுடன் சேர்ந்தியங்கவில்லை என்பதும் இந்த நிறுவனம் வங்குரோத்து நிலையில் இருந்ததும் விற்பனைக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இது மட்டுமா..?
கூகுள் – யூ ரூப் – மைக்கிரோ சொப்ற் ஆகிய நிறுவனங்களை தன் வசம் வைத்திருக்கும் அமெரிக்கா அதற்கு இணையாக உலகில் எங்கு யார் வளர்ந்தாலும் கால்களை முறித்துவிடுகிறது.
உதாரணமாக மேக்கா ஒப்லோட் என்ற இணையத்தளம் கோடானு கோடி வருமானத்தை உழைத்தது அதன் உரிமையாளர் அமெரிக்காவிற்கு வெளியே இருந்த காரணத்தால் அவர் கைதானார், அவர் செய்த தவறுகளையே கூகுளும், யூ ரூப்பும் செய்தாலும் மேக்கா ஒப்லோட் தகர்க்கப்பட்டது.
இப்போது செயற்படாமல் போன மேக்கா ஒப்லோட்டில் தமது ஆவணங்களை வைத்தவர்கள் பேரிழப்பை சந்தித்துள்ளார்கள்.
அமெரிக்காவை மீறி இணைய உலகில் புதிய பகாசுர நிறுவனங்கள் தலையெடுப்பது இயலாத காரியமே..
இதை ஆதாரமாக வைத்து…
இன்றுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து அமெரிக்கா கச்சிதமாக மீண்டு வந்துவிடும், ஆனால் ஐரோப்பாவால் அப்படி வர முடியாது.
மேலும் சென்ற வாரம் பேஸ்புக்கை பங்குச் சந்தைக்கு கொண்டு வந்து 100 பில்லியன் பெறுமதியான பங்குகளை விற்பனை சந்தையில் போட்டது அமெரிக்கா.
கடந்த திங்கள் 11 வீதம் பேஸ்புக் பங்குகள் வீழ்ச்சி கண்டன இன்று 8.2 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
வடக்கு ஐரோப்பாவில் மட்டும் 225.000 பேஸ்புக் பங்குகள் வாங்கப்பட்டுள்ளன இதில் 40 வீதம் டென்மார்க்கில் வாங்கப்பட்டுள்ளது, இதுவரை வாங்கியவர்கள் அனைவரும் இழப்பையே சந்தித்துள்ளனர்.
இவற்றை நன்கு அவதானித்து…
அறிவியல் இணைய உலகத்தில் ஏற்பட்டுள்ள மோதலே எதிர்கால உலகம் என்பதை தமிழ் மக்கள் புரியத் தவறினால் முள்ளிவாய்க்காலைவிட பாரிய கொடுப்பனவை கொடுக்க நேரிடும்.
அலைகள்
0 Responses to கூகுள் நிறுவனத்தின் இன்னொரு அசுரப் பாய்ச்சல்