Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராசா உயிருக்கு ஆபத்து உள்ளது சாமி

பதிந்தவர்: தம்பியன் 11 May 2012

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மிக மிக முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் ஏ.ராசா. அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதால், போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இதுவரை ஜாமீன் கோராமல் இருந்து வந்தார் ராசா. அவரது உயிருக்கு ஆபத்து இருந்து வருவதாக சுப்பிரமணியசாமியும் தொடர்ந்து கூறி வருகிறார். இது இரண்டையும் முடிச்சுப் போட்டு பேச்சுக்களும் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் முதல் முறையாக ராசா ஜாமீன் கோரியுள்ளார். இன்று அந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ராசாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சாமி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ. ராசாவிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கும்பட்சத்தில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் குறித்து அனைத்து விவரங்களும் தெரிந்தவர் ராசாதான் என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே போதுமான பாதுகாப்பு அவருக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் சாமி.

1 Response to ராசா உயிருக்கு ஆபத்து உள்ளது சாமி

  1. ada pachchonthi naaye! nee sakama iruntrhu engala en kolra, muthevi

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com