மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா அறிவிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பிற ஆதீனங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்டதை வாபஸ் வாங்க வேண்டும் என்று கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நித்தியானந்தாவும், மதுரை ஆதீனம் அருணகிரிநாதரும் இன்று மதுரையில் செய்தி யாளர்களிடம் சந்தித்தனர்.
அப்போது இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் , ‘’நாங்கள் இருவரும் விரைவில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னிலை விளக்கம் அளிப்போம்’’ என்றனர்.
மேலும், ’’மதுரை உதவி கமிஷனர் துரைசாமி குண்டர்களை வைத்து மிரட்டுகிறார். இது குறித்து விரையில் உயர் அதிகாரிகளிடம் புகார் தர இருக்கிறோம்’’ என்றனர்.
0 Responses to ஜெயலலிதாவை சந்தித்து தன்னிலை விளக்கம் அளிப்பேன் | நித்தி