இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் இலங்கை அரசினால் 2009 மே 17,18 அன்று முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று மாலை சென்னை வில்லிவாக்கத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது,
இந்நிகழ்வில் அய்யா பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் நினைவேந்தல் ஒளிச்சுடரை ஏற்றினார்.
அதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கையில் மெழுகுவர்த்திச் சுடர் ஏந்தி 10 மணித்துளிகள் தங்கள் நினைவஞ்சலியினை செலுத்தினர்.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இயக்குநர் புகழேந்தி தங்கராசு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பேரெழுச்சியுடன் சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு | காணொளி | படங்கள் | இணைப்பு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
18 May 2012
உங்கள் இணையதளத்திற்கு ஏராளமான வாசகர்கள் வர வேண்டுமா? உங்கள் செய்திகளை உடனுக்குடன் http://www.hotlinksin.com திரட்டியில் இணைத்திடுங்கள்.