மத்திய அரசுக்கு எதிராக மாநில முதல்வர்களை தூண்ட இலங்கை முயற்சி செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுக்குறித்து, மாநில முதல்வர்களுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் பிரீஸ் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இலங்கை சென்றிருந்த இந்திய நாடாளுமன்ற குழுவினரிடம், தமது நாட்டில் போருக்கு பின் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை காட்டை மெய்சிலிர்க்கவைக்க நினைத்தது.
ஆனால், தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும், வடக்கில் இருந்து படைகளை விலக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் அந்த குழு அறிக்கையாக கொடுத்தது.
இது இலங்கைக்கு பெரும் இக்கட்டை உருவாக்கி உள்ளதால், , அடுத்தக்கட்டமாக மாநில முதல்வர்களுக்கு அந்நாட்டின் முன்னேற்றங்கள் குறித்து, கடிதம் எழுதியுள்ளார் இலங்கை அமைச்சர் பிரீஸ்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மாநில முதல்வர்கள் உரிய மதிப்பளிப்பார்கள் என்று நம்புவதாக பிரீஸ் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை மூலம் மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் விதமாக சமயம் பார்த்து காய் நகர்த்தும் பணியில் இலங்கை காய் நகர்த்த தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Responses to மாநில முதல்வர்களை வசியம் செய்யும் இலங்கை