அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயி்ன் மதிப்பு சரிவால் வெளிநாடுகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு தொடர் சரிவு : வர்த்தக ரீதியில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கங்கள் காணப்படுவது வழக்கமான ஒன்று என்ற போதிலும் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயிலும் இந்திய மாணவர்களி்ன் கல்வி கட்டணம் அதிகரிப்பு காரணமாக அவர்களின் படிப்பு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில்கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 2.6 லட்சம் பேராகும். பெரும்பாலானோர் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் பயின்று வருகி்ன்றனர்.
இந்நிலையில் சிங்கப்பூர்டாலருக்கு எதிராக 18 சதவீதமும், கனடா டாலருக்கு எதிராக 17 சதவீதம், இங்கிலாந்தின் பவுண்டுக்கு எதிராக 16 சதவீதமும் ஆஸ்திரேலியா டாலருக்குஎதிராக 13 சதவீத அளவிற்கும் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக நடுத்தர இந்திய குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தாண்டு ஜனவரி முதல் இதுவரையில் அமெரிக்கா டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 20 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருப்பினும் வெளிநாடுகளில் கல்வி கற்கும் மோகம் இந்திய மாணவர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு காரணமாக கல்வி செலவு அதிகரித்துள்ளதை தெரிந்து வைத்துள்ள மாணவர்கள் கல்வி நேரம் போக மீதமுள்ள நேரங்களில் பல்வேறு பணிகள் செய்து தேவையான பணத்தை ஈடுசெய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்.



0 Responses to இந்திய ரூபாய் சரிவு கல்வி பாதிக்கும் அபாயம்