முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தலைமைச் சூத்திரதாரி மகிந்த ராஜபக்ஸ பிரித்தானியா வரவிருப்பதுடன் அங்கு நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மையத்தின் கூட்டமொன்றில் ஜுன் மாதம் 6ம் திகதி உரையாற்ற இருப்பதாகவும் செய்திகள் கிடைத்திருக்கின்றன.
எம் இனத்தை அழித்தொழித்து எம்மண்ணை நயவஞ்சகமாக ஆக்கிரமித்துவரும் ஸ்ரீலங்காவின் அரசுத் தலைவர் மீதுள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். மகிந்த ராஜபக்ஸ உரையாற்றவிருக்கும் நாளில் ஒரு மிகப்பெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடாத்துவதற்கு பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார்கள்.
சுவிஸ் வாழ் எம் தமிழ் உறவுகளையும் பிரித்தானியாவில் நடாத்தப்படவிருக்கும் இப்பேரணிக்கு வலுச் சேர்க்கும் வகையில் பெருமளவில் வந்து இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதற்கான பிரயாண ஒழுங்குகள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் இந்நிகழ்வில் சென்று கலந்துகொள்ள வாய்ப்பில்லாதவர்கள் பிரித்தானியாவில் வாழும் தங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கும் இச்செய்தியை தெரியப்படுத்தி அவர்களையும் அந்நிகழ்வில் கலந்து எமது வரலாற்றுக் கடமையினைச் செய்ய வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிரயாண ஒழுங்குகளிற்கான - தொடர்புகட்கு: 078 713 09 18, 078 662 93 06, 076 224 88 59
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
வி.ரகுபதி
சுவிஸ் வாழ் உறவுகளுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அவசர செய்தியறிக்கை
பதிந்தவர்:
ஈழப்பிரியா
04 June 2012
0 Responses to சுவிஸ் வாழ் உறவுகளுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அவசர செய்தியறிக்கை