Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது மக்கள் அனைவரினையும் யூன் மாதம் 6ஆம் நாள் காலை 9:00 மணிக்கு லண்டன் மான்சன் கவுசுக்கு முன்னால் அணிதிரளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

மனிதகுலத்திற்கு எதிரான திட்டமிட்ட பாரிய தமிழினவழிப்பை மேற்கொண்ட போர்க்குற்றவாளியான சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுநலவாய நாடுகளின் வர்த்தகமன்றக் கூட்டத்தில் எதிர்வரும் 06 ஆம் திகதி புதன்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் 10:30 மணிக்கிடையில் உரையாற்றவுள்ளார். மாபெரும் போர்க்குற்றவாளி மகிந்தவின் உரை லண்டனில் உள்ள மான்சன் கவுசில்(Mansion House, London, EC4N 8BH (Tube: Bank) நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, மகிந்தவுக்கான மதியவிருந்து பொதுநலவாய நாடுகளின் செயலகம் அமைந்திருக்கும் லண்டன் மால்பொறோக் கவுசில்(Marlborough House, Pall Mall, London, SW1Y 5HX (Tube: Green Park) நடைபெறவுள்ளது.

அங்கே இனவழிப்புக் குற்றவாளி மகிந்தவுக்கு எதிராக மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை 10:00 மணிக்கு முன்னர் மகிந்த உரையாற்றுவதற்காக அந்த வீதியால் ஊர்தியில் வரும்போதே எமது ஆர்ப்பாட்டத்;தை தொடங்கவேண்டியிருப்பதால் அன்றைய நாள் காலை 9:00 மணிக்கு மான்சன் கவுசுக்கு முன்னால் எமது மக்கள் அனைவரும் அணியணியாகத் திரண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். (மான்சன் கவுசுக்கு மக்கள் வந்தடைவதற்கான ஒரு எளிமையான விளக்கப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது).
அதனையடுத்து, மகிந்தவிற்கு மதியவிருந்து நடைபெறவிருக்கும் ஆயசடடிழசழரபா ர்ழரளந முன்னாலும் எமது பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், மகிந்த வேறுசில நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் விபரங்கள் எமக்குத் தெரியவந்தால் அங்கும் எமது மக்கள் படையெடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதும் அறியத்தரப்படுகிறது.

எமது இனத்தை அழித்து எம்மினத்தை நிர்க்கதிக்குள்ளாக்கியிருக்கும் போர்க்குற்றவாளி மகிந்தவினை நீதியின் முன்நிறுத்தும் வரை நாம் ஓயமாட்டோம் என்பதை வீதியில் இறங்கி அனைத்துலகும் அறியும் வண்ணம் வெளிப்படுத்துவோம்.
1995 ஆம் ஆண்டு 7500 பொஸ்னிய முஸ்லிம்களை செரெபிறேனிக்காவில் படுகொலைசெய்த போர்க்குற்றத்திற்காக ஜெனரல் றட்கோ மிலாடிக் 16 வருடங்கள் கடந்தும் அண்மையில் (2011) கைதுசெய்யப்பட்டிருந்தார். அத்துடன், சில தினங்களுக்கு முன் ஐ.நா. ஆதரவுடனான போர்க்குற்ற நீதிமன்றம் முன்னால் லைபீரிய ஜனாதிபதி சாள்ஸ் ரெய்லருக்கு சியரா லியோனில் பயங்கர வன்முறையில் ஈடுபட்ட குழுவினருக்கு ஆயுதங்களை விநியோகித்து அவற்றுக்குப் பதிலாக இரத்தினங்களை பெற்றுக்கொண்டதாக குற்றம் குமத்தப்பட்டு 50 வருட சிறைத் தண்டனை விதித்திருந்தது.

அப்படியானால், இலங்கையில் 1,50,000 இற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்களை இனவழிப்புச் செய்த மகிந்த ராஜபக்சவுக்கு உலகம் என்ன தண்டனை வழங்கப்போகிறது?
ஆகவே எமக்கான நீதியைப் பெறும்வரை, உலகின் மனச்சாட்சிக் கதவுகள் திறக்கப்படும்வரை, நாம் அணியணியாகத் திரண்டு வீதியில் இறங்கிப் போராடுவதற்கு எமது மக்கள் அனைவரும் லண்டன் ஆயளெழைn ர்ழரளந முன்னால் காலை 9:00 மணியளவில் ஒன்றுதிரளுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்ளுகின்றோம்

நன்றி.

மேலதிக தொடர்புகளுக்கு:-

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு,

ஐரோப்பிய நாடுகளிலிருந்தான போக்குவரத்து ஒழுங்குகளுக்கு அந்தந்த நாட்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.


மான்சன் கவுசுக்கு செல்வதற்கான ஒரு எழிய வழிகாட்டி கீழே உள்ளது:





0 Responses to பிரித்தானிய, ஐரோப்பிய தமிழ்மக்களுக்கு ஓர் அவசர அறிவித்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com