Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று புதுவையில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ’’தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சாதிய தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. ஊராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் தாழ்த்தப்பட்டவர்கள் பணிபுரிய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் கொட்டகாச்சல் பஞ்சாயத்தில் தலைவர் கருப்பன் உட்கார நாற்காலிகூட வழங்கப்படவில்லை. தரையில் அமர்ந்துதான் கூட்டங்களையே நடத்தி வருகிறார்.

இத்தகைய கூட்டங்கள் கலெக்டர் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். பஞ்சாயத்து தலைவர் கருப் பனுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக தென் மாவட்டங்களில் இத்தகைய நிலை அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே முஞ்சனூர் கிராமத்தில் சுடுகாட்டு பாதையை அடைத் ததால் பிணத்தை எடுத்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பிணத்தை சேலத்துக்கு கடத்தி சென்று போலீசார் அங்கேயே இறுதி சடங்கு செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறார்கள். இந்த பிரச்சினையில் விடுதலை சிறுத்தைகள் 200 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சாதிய கொடுமைகளை கண்டித்து வருகிற 14-ந் தேதி எனது தலைமையில் நாமக் கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

எனது 50-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்டு 17-ந் தேதி பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான இடம் விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த விழாவில் 50 பொற்காசுகள் வழங்கப்படும். இதைப்போல புதுவை மாநில விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அடுத்த மாதம் (ஜூலை) 7-ந் தேதி 50 பவுன் பொற்காசுகள் வழங்கும் விழா நடைபெறும்’’ என்று கூறினார்.

1 Response to சாதிய கொடுமைகளை கண்டித்து தி்ருமாவளவன் ஆர்ப்பாட்டம்

  1. என்று மடியும் இந்த தமிழினத்தின் மூடத்தனம். தமிழ்ப் பற்று, இனப்பற்று உணர்வுடன் , தமிழ் மண்ணைக்
    காக்க உயிரையும் தியாகம் செய்யத் துணிந்த ஒரு சர்வாதிகாரியின் கையில் ஒரு தனித்தமிழ் அரசு
    உருவாகும்வரை தமிழினத்தைத் திருத்தவே முடியாது. அதுவரை தமிழர்கள் சினிமா நடிகர்களின்
    கட்டவுட்டுக்குப் பாலூற்றிக்கொண்டே இருப்பார்கள், அரசியல்வாதிகள் , சினிமா நடிகர்களுக்கு
    ஜலதோஷம் பிடித்தால் மொட்டைபோட்டு மண் சோறு சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள், நித்தியானந்த
    போன்ற காவியுடுத்த காமுகர்களுக்கு பொன்முடி சூடி குடை, கொடி, ஆலவட்டம் பிடித்துக்கொண்டே
    இருப்பார்கள், சாதியின் பெயரால் தன் இன மக்களை கூறுபோட்டுக்கொண்டே இருப்பார்கள்.
    தன் இனத்தை அழிக்கும் அந்நியனுக்கு கோடரிக்காம்பாக உதவிக்கொண்டே இருப்பார்கள். அதில் பெருமையும்
    கொள்வார்கள். சுருக்கமாக, விளக்கமாகச் சொல்வதென்றால் தமிழினம் ஒரு மந்தைக்கூட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com