வெளிநாட்டு தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த சமகால அரசியல் நிலைமைகள் குறித்த செவ்வியொன்று தொடர்பாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று விசேட குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பாக ஒன்லைன் உதயனுக்கு கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,
இன்று நண்பகல் குற்றப்புலனாய்வு பிரிவினரிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து, நாலாம் மாடிக்குச் சென்றதாகவும் தான் அங்கு 1மணி தொடக்கம் 4 மணி நேரம் தொடர் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும்வெளிநாட்டு தமிழ் இணையத் தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் அவ்விடயங்கள் இலங்கையின் இறையாண்மையினை பாதிப்பவையாக அமைந்துள்ளது.
அத்துடன் நான் முன்னால் விடுதலைப் புலி உறுப்பினராக இருந்துள்ளதாகவும் தமிழிழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கி வருகின்றீர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு பல்வேறு கேள்விகள் தன்னிடம் கேட்கப்பட்டது.
அவை தொடர்பாக தாம் தனது கருத்துக்களை தெரிவித்தகாகவும் தாம் அவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை தான் ஒரு ஆசிரியராகவே இருந்ததாகவும் விடுதலைப் புலிகளுக்கு தாம் எந்தவிதமான நிதி உதவிகளையும் வழங்கவில்லை.
அத்துடன் வெளிநாட்டு ஊடகங்கள் தனது கருத்தினை திரிவுபடுத்தி கூறியுள்ளதாகவும் அதன் மூலப்பிரதியினை பார்த்தால் தாம் உண்மையாக கூறிய கருத்தினை அறியலாம் என்று கூறியுள்ளார்.
குறித்த செவ்வியின் மூலப்பிரதி எடுக்கப்பட்ட பின்னர் அடுத்த கட்டம் குறித்து சிந்திக்கப்படும் எனவும் குற்றப்புலனாய்வு தரப்பினர் தெரிவித்துள்ளதாக சிறிதரன் தெரிவித்துள்ளார்.
0 Responses to நாலாம் மாடியில் சிறிதரனிடம் துருவுத் துருவி விசாரணை