பொன்சேகாவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் செயல்திட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
புத்திக்க பத்திரன, பாலித்த ரங்கே பண்டார, பாலித தேவரப்பெரும, அசோக அபேசிங்க ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தத்தமது மாவட்டங்களில் இந்தச் செயல்திட்டத்துக்கான வைபவங்களை ஒழுங்கு செய்துள்ளனர்.
இதன் முதல் நிகழ்வு அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன தலைமையில் மாத்தறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் இரண்டாம் நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதுடன் இதனைப் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார பொறுப்பேற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
இதற்கு மேலதிகமாக சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மேலும் 25 வைபவங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.
எதிர்வரும் 30ஆம் திகதி புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ தேர்தல் தொகுதியின் தோப்புச் சந்தியில் ஆரம்பித்து நைனாமடம், வென்னப்பு நகர்ச் சந்தி, மாரவில, மகாவௌ நகர், மாதம்பை தேவாயலம் ஆகிய இடங்களில் இந்த வைபவங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
மாதம்பை தேவாயலத்தில் நடைபெறும் பூஜை வழிபாடுகளின் பின்னர் தொடர்ச்சியாக முக்கிய நகரங்களில் சரத் பொன்சேகாவுக்கான வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
0 Responses to ஐ.தே.க. எம்.பிக்கள் நால்வர் பொன்சேகாவுடன் இணைவு