அரசியல் தீர்வு, காணி பிரச்சினை போன்ற பல்வேறு விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் இன்னும் தீர்வினை முன்வைக்கவில்லை.
இந்த நிலையில், இவ்வாறான பிரச்சினைகளை வலியுறுத்தி, எதிர்வரும் நாட்களில் அகிம்சை வலியில் சத்தியா கிரக போராட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தள்ளார்.
ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து அரசாங்கத்துடன் பல்வேறு முயற்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டது.
எனினும் அரசாங்கம் இதுவரையில் எந்த முனைப்பையும் காட்டவில்லை. எந்த திட்டத்தையும் முன்வைக்கவில்லை.
இந்த நிலையில் வன்முறைகள் இல்லாமல், எங்கள் உரிமைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு, அகிம்சை வழியில் இந்த சத்தியாகிரக போராட்டத்தை நடத்தவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒன்றிணைந்த இலங்கை அல்லது ஐக்கிய இலங்கைக்குள், அரசாங்கத்திடம் இருந்து தாங்கள் எதனை எதிர்பார்க்கிறீர்கள் என சம்பந்தனிடம் வினவப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய அவர், பிரிக்கப்படாத இலங்கைக்குள், பிராந்திய ரீதியாக வழங்கப்பட கூடிய அதிகூடிடிய அதிகாரங்களுடன், பிராந்திய அரசாங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், எமது மக்கள் சுய உரிமையுடனும், மதிப்புடனும் வாழ இடம்கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இனப் பிரச்சினையை வலியுறுத்தி சாத்வீக போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்: சம்பந்தன்
பதிந்தவர்:
தம்பியன்
30 June 2012
0 Responses to இனப் பிரச்சினையை வலியுறுத்தி சாத்வீக போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்: சம்பந்தன்