லண்டனில் கடந்த வருடம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தமிழ்ச் சிறுமியான துஷா கமலேஷ்வரன் தன்னால் எழுந்த நடக்க முடியாத போதிலும் தனது பெற்றோருடன் தனது பொழுதினை மிக மகிழ்ச்சியாக செலவழித்து வருகின்றார்.
அடுத்தமாதம் 20 ஆம் திகதி தனது 7 ஆவது வயதை கடக்கவுள்ள துஷாவினால் தற்போது எழுந்து நடக்கமுடியாது.
தெற்கு லண்டனில் உள்ள கடையொன்றில் வைத்து கடந்த வருடம் மார்ச் மாதம் இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
இச்சிறுமியின் பெற்றோர் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் ஆவர்.
அதன்பின்னர் அச்சிறுமியின் இடுப்பிற்கு கீழான பகுதி செயலிழந்து போனதுடன் இவரால் இனிமேல் எழுந்து நடக்கமுடியாதென மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
எனினும் தனது தன்னம்பிக்கையை இழக்காத துஷா பெற்றோருடன் அவரது நேரத்தினை மிக மகிழ்ச்சியாக செலவழித்துவருகின்றார்.
லண்டனில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கைத் தமிழ்ச் சிறுமியின் தன்னம்பிக்கை! (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
ஈழப்பிரியா
11 June 2012



0 Responses to லண்டனில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கைத் தமிழ்ச் சிறுமியின் தன்னம்பிக்கை! (காணொளி இணைப்பு)