Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளிவாய்க்காலைப் பொறுத்தவரை அங்கே என்ன தான் நடக்கிறது என்ற ஏக்கங்கள் பல தமிழர்கள் மனதில் உள்ளது. அப்பகுதிக்கு தமிழர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அப்பகுதியை சல்லடைபோட்டு அங்குலம் அங்குலமாக் இராணுவத்தினர் தேடிவருகின்றனர் என்பதே உண்மையாகும்.

யுத்தம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிய பிற்பாடும், ஆனந்தபுரம், சாலை, வலைஞர்மடம், புதுமாத்தளான், இரட்டை முள்ளிவாய்க்கால் மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதியை இராணுவத்தினர் தொடர்ந்தும் கடும் தேடுதலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

இங்கே காணப்படும் மனித எலும்புகளை உருக்கி உக்கவைக்க சில திரவங்களை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தினர். இதனைத் தவிர, விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த இராணுவத் தளபாடங்கள், ஆயுதங்கள், மற்றும் படகுகளையும் இலங்கை இராணுவம் கண்டுபிடிக்க முனைப்புக் காட்டி வருகின்றனர்.

இவர்கள் அனைத்து இடங்களையும் தோண்டிப் பார்த்து அங்கே புதையுண்டு கிடக்கும் பொருட்களை நாளுக்கு நாள் தோண்டி எடுத்து வருகின்றனர்.

இவற்றில் பெரும் பகுதியை இலங்கை இராணுவத்தினர், விற்பனை செய்தும் வருகின்றனர்.

தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் செல்ல தடை!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சில முக்கிய இடங்களுக்குத் தமிழ் மக்கள் செல்வதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளால் அரிசி ஏற்றி வரப்பட்ட போது கரையொதுங்கிய 100 மீற்றர் நீளமான கப்பல் ஒன்று காணப்படுகிறது.

வன்னிப் பகுதிகளுக்கு வருகை தரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் இதனைப் பார்ப்பதற்கு முண்டியடிப்பதை காண முடிகின்றது. ஆனால் தமிழ் மக்கள் இதனைப் பார்வையிடச் செல்வதை ஏனோ இராணுவத்தினர் அனுமதிப்பதில்லை.

முஸ்லிம் மக்கள் கூட இதனைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படும் நிலையில் தமிழ் மக்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்துகின்றமை ஏன் என்று தெரியவில்லை. இதில் என்ன பாரபட்சம் என்று கேட்கின்றனர் தமிழ் மக்கள்.

மேலும் இந்தக் கப்பலை பார்வையிடச் செல்லும் பெரும்பான்மையின மக்கள் கப்பலின் அருகில் சென்று சிறிதளவு மணலையும் தம்முடன் எடுத்துச் செல்வதை அவதானிக்க முடிந்தது. இவ்வாறு மண் எடுக்கும் நிகழ்வுகள் புலிகளின் முக்கிய இடங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to முள்ளிவாய்க்காலில் மனித எலும்புகளை உருக்கி உக்கவைக்கும் இராணுவத்தினர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com