Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கருத்து தெரிவித்துள்ளார். எனவே சம்பந்தன் நாட்டு மக்கள் முன்னிலையில் மன்னிப்புக் கோர வேண்டும். அது மட்டுமின்றி அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்னும் தமிழீழ கொள்கைகளிலிருந்து விடுபடவில்லை. சர்வதேச புலிகளுடனும் சூத்திரதாரிகளுடனும் இணைந்து சம்பந்தன் குழு நாட்டிற்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபடுகின்றமை இன்று நாட்டிற்கு தெரியவந்து விட்டது என்றும் அம்முன்னணி குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பிரியந்ஜித் விதாரண கூறுகையில்,

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது. இதில் சம்பந்தன் எம்.பி. விசேட உரையினையாற்றினார்.

இவ் உரையானது கடும் கண்டனத்திற்கு உட்படுத்த வேண்டியதொன்றாகும். ஏனெனில் புலிகளினால் உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத போரை ஒரு விடுதலைப் போராட்டமாக சம்பந்தன் வர்ணித்தார். அதேபோன்று 13 ஆவது திருத்தத் சட்டத்தை சுய நிர்ணய உரிமைக்கான உபாயமாகவே பயன்படுத்துவதாகவும் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

எனவே அரசியலமைப்பின் 157 ஏ பிரிவின் பிரகாரம் ஐக்கிய இலங்கைக்குள் தனி நாட்டிற்கான முன்னெடுப்புகள் செய்துள்ளார். இதனை மையப்படுத்தி அவரை சட்டத்தின் முன் நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

0 Responses to சம்பந்தன் மன்னிப்பு கோர வேண்டும்: தேசிய சுதந்திர முன்னணி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com