பாஜக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து, அந்த கோரிக்கையும் வலுத்து வரும் நிலையில் பிரதமர் பொறுப்பில் இருந்து மன்மோகன் சிங்கை விலக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர், பி.சி. சாக்கோ கூறியுள்ளார்.
நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக சி பி ஐ முறையான விசாரணை நடத்த மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவத் தயாராக இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நடக்க அதிக நாட்கள் மற்றும் மாதங்கள் உள்ள நிலையில் அடுத்த பிரதமர் யார் என்பது அர்த்தமற்ற கேள்வி. அதோடு, பிரதமரை அவர் பொறுப்பில் இருந்து விலக்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதில் காங்கிரஸ் மிக உறுதியாக உள்ளது.
மத்தியில் வலுவான ஆட்சி உள்ளதால் தேர்தல் நடக்கும் வரை பிரதமர் என்றால் அது மன்மோகன் சிங்தான். நாடாளுமன்றத்தின் சிறப்பு அவையைக் கூட்டி அனைத்துக் கட்சி ஒப்புதலுடன் உணவுப் பாதுகாப்பு மசோதா மற்றும், நிலம் கையகப்படுத்தும் மசோதா ஆகிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு மிக ஆர்வமாக உள்ளது என்றும் சாக்கோ தெரிவித்து இருப்பது குறிப்பிடத் தக்கது.
மத்தியில் வலுவான ஆட்சி நடைபெற்று வருவதால் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியேத் தேர்தல் வரும் என்று ஆளாளுக்கு கூறிவரும் கருத்துக்களை நம்பவேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 Responses to பிரதமர் பொறுப்பில் இருந்து மன்மோகன் சிங்கை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை : காங்கிரஸ்