நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எகிப்திய முன்னாள் அதிபர் கொஸ்னி முபாரக் தீர்ப்பை கேள்விப்பட்டதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.
கெய்ரோவின் மூலையில் அமைந்துள்ள சிறைச்சாலையில் உள்ள இவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது.
வைத்தியர்கள் உலங்குவானூர்தியில் விரைந்து சென்று அவருக்கு சிகிச்சையளித்தனர்.
முபாரக் கடும் சுகயீனத்தில் இருப்பதாக அல் அக்ரம் பத்திரிகையின் காலைச் செய்தி தெரிவிக்கிறது.
ஏற்கெனவே மரணதண்டனை வழங்கப்படுமென எதிர்பார்த்த சர்வாதிகாரி ஆயுள் தண்டனையுடன் தப்பித்துக் கொண்டார்.
இது நடைபெற்றுக் கொண்டிருக்க எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள தாகிர் பிளேசில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி எகிப்திய நீதித்துறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.
முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கிய கையோடு இராணுவ அதிகாரிகள், இதர வன்முறையாளர், பின்னால் செயற்பட்ட நம்பியார் போன்ற வில்லன்களை சட்டம் கோட்டைவிட்டுள்ளதாகவும் கோஷமிட்டார்கள்.
இதுபோன்ற ஆர்பாட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்றுள்ளன.
இதேவேளை வீறு கொண்ட இளைஞர்கள் எகிப்திய அதிபர் வேட்பாளர் அகமட் ஷபீக்கின் தேர்தல் காரியாலயங்களில் ஒன்றை உடைத்துத் தகர்த்தார்கள்.
அங்கிருந்த கணினிகள், தளவாடங்கள் உடைத்தெறியப்பட்டன.
அகமட் ஷபீக் முன்னர் எகிப்து அதிபர் கொஸ்னி முபாரக்கின் கடைசிப் பிரதமராக பதவி வகித்தவராகும்.
அதேவேளை இஸ்லாமிய சகோதர அமைப்பினர் இதுபோன்ற நிகழ்வுகளை நடாத்தி தேர்தலை தமக்கு சாதகமாக திசை திருப்ப வாய்ப்புள்ளது.
எகிப்தில் ஜனநாயகம் குழந்தை நிலையில் இருப்பதால் சிறீலங்கா போன்ற நாடுகளில் காணப்படும் தேர்கால தன்மைகள் இங்கும் தென்படுகின்றன.
இந்தத் தாக்குதல்களின் பின்னால் தமது எதிர் வேட்பாளர் இருக்கிறார் என்று ஷபீக் பிரகடனம் செய்தால் நிலமை மாற இடமுண்டு.
அலைகள்
0 Responses to கொஸ்னி முபாரக் கடும் சுகயீனம் எகிப்தில் ஆர்பாட்டம்