பிரிட்டன் மகாராணி எலிசபெத் இரண்டு தனது அறுபதாவது ஆட்சி நிறைவு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
இங்கிலாந்தில் உள்ள 9500 வீதிகள் இதற்காக பெரும் அலங்கார ஜோடனைகளுடன் காட்சி தருகின்றன.
இன்று குதிரையோட்ட சதுக்கத்தில் நின்று குதிரையோட்ட பந்தயத்தை மகாராணி பார்வையிடுகிறார், சுமார் நான்கு தினங்கள் இங்கிலாந்து விழாக்கோலம் பூணவுள்ளது.
தற்போது 86 வயதைத் தொட்டுவிட்ட மகாராணி தனது 90 வயதான தனது கணவருடன் வீதியுலா வருகிறார்.
பிரிட்டன் அரசு இலங்கையை கைப்பற்றி ஆட்சி செய்து, தனியரசுடன் இருந்த தமிழ் மக்களை தேயிலைத்தோட்ட உரிமைக்காக சிங்களவரிடம் விற்று விடைபெற்றுச் சென்றது தெரிந்ததே.
கடுகளவும் அறிவோ தூரப்பார்வையோ கிடையாத தலைப்பாகை அணிந்து சேர் பட்டம் பெற்ற அன்றைய தமிழ் தலைவர்களின் காதில் பூ சுற்றி தமிழர்களுக்கு நாடும் இல்லாமல் உரிமையும் இல்லாமல் செய்ததும் தெரிந்ததே.
தப்பான ஒரு குடியேற்ற ஆட்சி பிரிட்டனின் ஆட்சி என்பதற்கு இலங்கையில் கடந்த 2009 ம் ஆண்டு இறந்த 140.000 பேருடைய மரணங்களே சாட்சியமாகும்.
மகாராணியின் வைரவிழா அவருடைய சாதனை பாராட்டப்பட வேண்டியதே அதேவேளை பிரிட்டனன் குடியேற்ற ஆட்சியால் இழைந்த தப்பிதங்களையும் சுட்டிக்காட்ட வேண்டிய தருணம் இதுவாகும்.
பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியின் தவறுகள் குறித்த அதிருப்தியை தமிழர் கூட்டமைப்பு சம்பிரதாய பூர்வமாக பிரிட்டனிடம் வழங்க வேண்டியது முக்கியம்.
தமிழரசுக்கட்சி விழாவில் தோன்றி சேர் பொன் இராமநாதன் போல தலைப்பாகை அணிவதை யாரும் தடுக்கவில்லை ஆனால் தலைப்பாகை சூடி மறுபடியும் சேர் .பொன் இராமநாதன் இழைத்த வரலாற்று தவறுகளை இத்தனைக்குப் பிறகும் இழைத்துவிடக்கூடாது என்பது முக்கியமாகும்.
அலைகள்
0 Responses to வைரவிழா கொண்டாடும் பிரிட்டன் மகாராணி எலிசபெத் இரண்டு