Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூனுக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என பிரித்தானிய பிரதமரின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி சேனல் 4 செய்தி வெளியிட்டுள்ளது. இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கிரமமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றே பிரித்தானிய பிரதமர் வலியுறுத்தினார் என குறித்த பிரதமரின் பேச்சாளர் கூறியுள்ளார்.

எனினும் கொழும்பு ஊடகங்கள் இது தொடர்பில் விடுத்திருந்த செய்தியில், பிரித்தானிய பிரதமருக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்ததாக கூறியிருந்தன. ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் பந்துல ஜெயவர்த்தன இவ்வாறு தெரிவித்திருந்தார். மேலும் லண்டன் உரையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறுத்தவில்லை. கொமென்வெல்த் வர்த்தக சபையும், லண்டன் மாநகரமுமே நிறுத்திவிட்டன என்றார். இந்நிலையில் லண்டன் விவகாரத்தை கையாள்வதில் இலங்கை வெளிவிவகார அமைச்சு தோல்வி கண்டுவிட்டதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. மேலும் இந்த விடயம் தொடர்பில் விவாதம் ஒண்றை நடத்துவதற்கு அனுமதி கோரி ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

0 Responses to ராஜபக்சவுடன் டேவிட் கெமரூன் நட்பு ரீதியில் கலந்துரையாடவில்லை: பிரித்தானியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com