புத்தரின் சித்தாந்தம் தெரிந்த எமக்கு வல்லரசுகள் போதிக்கத் தேவையில்லை; பாங்கொக்கில் ஜனாதிபதி தெரிவிப்பு
புத்தரின் சித்தாந்தங்களை அறிந்த எங்களுக்கு, வல்லரசு முத்திரை குத்தப்பட்டவர்கள் போதிக்க வேண்டிய அவசியமில்லை. நீதியும், சட்டத்தின் ஆட்சியும் எங்களுக்கு அந்நியமான எண்ணக்கருக்கள் அல்ல. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஐ.நா. வெசாக் தின வைபவத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு:வல்லரசு, பிராந்திய வல்லரசு, பொருளாதார வல்லரசு என்பன போன்று, கொடுக்கப்பட்ட முத்திரைகளின் அடிப்படையில் மற்றவர்களுக்கு போதனை செய்ய அந்த நாடுகளும் குழுக்களும் முயற்சி செய்கின்றன.
ஒரு நபரின் அல்லது குழுவின் அல்லது சமூகத்தின் மேன்மை நிலை என்பது தெய்வீக உரிமையினலோ அல்லது பிறப்பின் மேன்மையினாலோ ஏற்படுவதல்ல. அது அவர்களின் நடவடிக்கையினாலேயே ஏற்படுகிறது. ஒரு குழு நடந்துகொள்ளும் முறையானது அந்தக் குழு உயர்ந்த முத்திரைக்கா அல்லது தாழ்ந்த முத்திரைக்கா தகுதியானது என்பதை தீர்மானிக்கும்.
சில நாடுகளும் குழுக்களும் தமக்கு குத்தப்பட்ட வல்லரசு, பிராந்திய வல்லரசு, பொருளாதார வல்லரசு என்பன போன்ற முத்திரைகளின் அடிப்படையில் ஏனையவர்களுக்கு போதனை செய்வதற்கு முயற்சி செய்கின்றன.
இந்த நாடுகள் அவற்றின் நடத்தை அடிப்படையிலேயே மதிப்பிடப்பட்டு மற்றொரு நாட்டைவிட அது மேலானதா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும்.
புத்தர் பெருமானாரின் போதனைகள் 26 நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்ததைப்போல் இன்றைக்கும் பொருத்தமானவையாக உள்ளன.
நவீன உலகின் தலைவர்கள் இந்த ஆலோசனைகளை பின்பற்றுவார்களாயின் பல உள்ளூர் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் மனித குலத்திற்கு நன்மையளிக்கும் வகையில் தீர்க்கப்படும்.
சிறு வயதிலிருந்து புத்தரின் சித்தாந்தங்களின் அடிப்படையில் வளர்க்கப்பட்ட எமக்கு நீதியும் சட்டத்தின் ஆட்சியும் அந்நியமான எண்ணக்கருக்கள் அல்ல. எனவே இந்த சித்தாந்தங்களானவை ஏற்கெனவே அறிந்தவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டியவையல்ல என்றார்.
0 Responses to மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் மகிந்த முடிச்சு