Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி. இவர் கடந்த 2007-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது முறைகேடாக நிதி திரட்டியதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை சர்கோசி மறுத்தார். மேலும் தான் அதிபராக இருப்பதால் இந்த வழக்கில் இருந்து தனக்கு விதி விலக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு அவர் அதிபர் பதவி வகிக்கும் வரை இந்த வழக்கு விசாரணைக்கும், சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் தடை விதித்து இருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நிக்கோலஸ் சர்கோசி தோல்வி அடைந்தார். இதைத்தொடர்ந்து அதிபர் பதவி விலகிய அவர் மீது முறைகேடாக தேர்தல் நிதி திரட்டியது குறித்து வழக்கு தொடரப்பட்டது. ஆகவே, அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் மாஜிஸ்திரேட்டு ஜீன்.மிகேல் ஜென்டில் மற்றும் 10 போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்த தகவலை சர்கோசியின் வக்கீல் தியர்ரி ஹெர்ஷோக் தெரிவித்தார். சோதனையின்போது சர்கோசி வீட்டில் இல்லை. தற்போது அவர் தனது குடும்பத்தினருடன் கனடாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

0 Responses to பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஷி வீட்டில் போலீஸ் சோதனை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com