இந்தியாவில் கிராமங்களில் வாழ்பவர்களில் 98 சதவீதம் பேரிடம் செல்போன் உள்ளது. ஆனால், 6.26 கோடிப் பேருக்கு பாதுகாக்கப்பட்ட கழிப்பறை வசதி கிடையாது.
இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
கடந்த 2011-ம் ஆண்டு இறுதி நிலவரப்படி, உலக மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதத்துக்கும் அதிகமானோரிடம் ஆன்லைன் இணைப்பு வசதி உள்ளது. ஆனால், 15 சதவீதம் மக்களுக்கு (101 கோடி) சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை.
இந்தியாவில் 6.26 கோடிப் பேருக்கு பாதுகாக்கப்பட்ட கழிப்பறை வசதி கிடையாது. கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் இணையதள வாடிக்கையாளர் எண்ணிக்கை 97 மடங்கு அதிகரித்துள்ளது.
அதாவது 1999-ல் 2.10 லட்சமாக இருந்த இணையதள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2011-ல் 2.03 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல, தனிநபர்களின் கணினி பயன்பாடும் அதிகரித்துள்ளது.
2001-ல் 54 லட்சம் பேரிடம் மட்டுமே கணினி இருந்தது. 2006-ல் இந்த எண்ணிக்கை 1.96 கோடியாக அதிகரித்தது. நோட்டு புத்தகங்களின் விற்பனை முந்தைய ஆண்டைவிட, கடந்த ஆண்டு 10 லட்சம் (மொத்தம் 35 லட்சம்) அதிகரித்துள்ளது.
கடந்த 2011-ல் மட்டும் இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 63 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் 35 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. நவீன வசதிகளில் முன்னேறி வரும் இந்தியாவில் பின்தங்கிய கிராமங்களைவிட 98 சதவீதம் பேர் செல்போன் வைத்துள்ளனர்.
அதே சமயம் 6.26 கோடிப்பேருக்கு இன்றும் பாதுகாக்கப்பட்ட கழிப்பறை வசதி கிடைக்கவில்லை. அவர்கள் இயற்கை உபாதைகளுக்கு திறந்த வெளியையே பயன்படுத்துகின்றனர். இது அவர்களுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
0 Responses to இந்தியாவின் கிராமங்களில் 98 சதவிகிதம் பேரிடம் செல்போன்