Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியாவில் அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து 4 ஆவது நாளாக முற்றி வரும் தாக்குதல்களின் உச்சக்கட்டமாக சிரியாவின் அலெப்போ நகரில் இன்று செவ்வாய்க் கிழமை நிகழும் மோதல்கள் அமைந்துள்ளதாக சிரியாவின் அண்மை நாடான லெபனானின் பெய்ரூட் நகரிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இம் மோதல்களின் போது சிரிய அரசு அலெப்போ நகரின் பல பகுதிகளிலும் கிளர்ச்சிப் படையின் இலக்குகளைக் குறி வைத்து ஹெலிகொப்டர்கள் மூலமாக ஷெல் வீச்சு நடத்தியது. இதேவேளை கிளர்ச்சிப் படையோ இன்று செவ்வாய் அதிகாலை அரச படையினரிடம் இருந்து இவர்கள் ஏற்கனவே கைப்பற்றயிருந்த யுத்த டாங்கிகளை உபயோகித்துப் பதில் தாக்குதல் நடத்தியதுடன் துருக்கி நாட்டின் எல்லைக்கு இட்டுச் செல்லும் முக்கிய பாதை ஒன்றை கைப்பற்றவும் முயற்சி செய்ததாகக் கூறப்படுகின்றது.

இம் மோதல்களில் இரு தரப்புக்குமே பலத்த சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும் திங்கட் கிழமை மட்டும் 25 பேர் பலியானதாகவும் பல பேர் வீடுகளை இழந்து போக்கிடம் இன்றி தவிப்பதுடன் நிவாரணங்களைப் பெற முடியாத கொடிய சூழ்நிலை காணப் படுவதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை அமெரிக்க அதிபர் ஒபாமாவும் துருக்கியின் பிரதமர் ரெசெப் டய்யிப் எர்டோகனும் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில், சிரியாவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் தற்போதைய அதிபர் பஷார் அல் அஷாட் இனை பதவி விலகச் செய்வதற்கும் தேவையான ஒருங்கமைக்கப் பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்ற ஒருமித்த கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

0 Responses to சிரியாவின் அலெப்போ பகுதியில் அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடரும் தாக்குதல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com