கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து 15.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் மற்றும் மேஜர் எழில்வேந்தன் ஆகியோரின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
திருமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு அணி மீது 15.08.1999 அன்று அதிகாலை கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
கடுமையான சமர் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையின் டோறாப் படகு ஒன்றை மீது கடற்கரும்புலிகள் தமது வெடிமருத்துப் படகினோல் மோதி வெடிக்கவைத்து மூழ்கடித்தனர்.
இதன்போது,
1.கடற்கரும்புலி லெப்.கேணல் நீதியப்பன்
(வீரபாகு சிவனேஸ்வரன் – மூதூர், திருகோணமலை)
2.கடற்கரும்புலி மேஜர்அந்தமான் (எழில்வேந்தன்)
(வடிவேல் செந்தில்குமார் – ஆரையம்பதி, மட்டக்களப்பு) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற கடற்சமரில் சிறிலங்கா கடற்படையின் மேலும் இரு டோறா படகுகள் கடற்புலிகளின் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்தன.
இக்கடற்சமரின்போது சிறிலங்கா கடற்படையினர் பத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ தாய் நாட்டின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் எழில்வேந்தன் ஆகியோரை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
டோறா மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்று!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
15 August 2012
0 Responses to டோறா மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்று!