Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தெ.ஆபிரிக்காவில் மர்கானா நிலக்கரி சுரங்க பணியாளர்களின் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தை அடக்குவதற்கு காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேரடியாக வீடியோ பதிவாக வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியிருக்கிறது.

குறித்த பிளாட்டினம் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிவோர் தமக்கு சம்பள உயர்வு வேண்டுமென கோரி போராட்டம் தொடங்கிய போது, அவர்களுடன் பல்வேறு இன சங்கங்கள் இணைந்து கொண்டுள்ளன. எனினும் போராட்டம் தீவிரமடைந்த போது அவர்களுக்குள்ளும் வன்முறை வெடித்துள்ளது. இதில் 10 பேர் ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று எவ்வாறாயினும் இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டுவரப்போவதாக அறிவித்திருந்த காவற்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து கண்ணீர்ப்புகை வீச்சு, நீர் கேன் தாக்குதல், போலி கிரனைட் தாக்குதல் என்பவற்றை நடத்தியுள்ளனர். எனினும் ஆர்ப்பாட்ட காரர்கள் களைந்து போகாததை அடுத்து சராமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர். இதில் சம்பவ இடத்திலேயே 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தெ.ஆபிரிக்காவில் நிறவெறி கலவரங்களுக்கு அடுத்து, காவற்துறையினர் தாக்குதலில் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டது நேற்றைய சம்பவத்தின் போது தான். இவ்வன்முறைகள் தொடர்பில் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ள தெ.ஆபிரிக்க அதிபர் ஜாகொப் சூமா, இந்த முட்டாள்தனமான கலகங்களை நினைத்து கலக்கமுற்றிருப்பதாக கூறியுள்ளார்.

0 Responses to தெ.ஆபிரிக்க சுரங்கப் பணியாளர்கள் மீது காவற்துறை துப்பாக்கிச்சூடு : 30 பேர் பலி (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com