Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சிற்கு எகுவடார் நாடு புகலிடம் வழங்க ஏற்றுக்கொண்டமைக்கு பிரித்தானியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இங்கிலாந்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறி செல்வதற்கு ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை என இங்கிலாந்து அரசு தரப்பு தெரிவித்துள்ள போதும், இவ்விடயத்தில் இங்கிலாந்து தமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என தாம் நம்புவதாக எகுவடார் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ரிகார்டோ படினோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அசாஞ்சேவுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை கண்டிப்பதாக எகுவடார் நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானத்தை முழுமனதோடு வரவேற்பதாகவும் படினோ தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் ஒரு கூட்டு முடிவுக்கு சுவீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகள் வரவேண்டுமெனவும் எகுவடோர் சார்பில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் பிரிட்டனில் உள்ள எகுவடோர் தூதரகத்திலிருந்து அசாஞ்ச் வெளியில் வந்தால் அவரை நிச்சயம் கைது செய்வோம் என மீண்டும் உறுதியாக கூறியுள்ளது பிரிட்டன். அசாஞ்ச் சுவீடனிலிருந்து அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவது பற்றியோ அல்லது அவரது அரசியல் நடவடிக்கைகள் பற்றியோ நாம் கருத்தில் கொள்ளவில்லை. பாலியல் குற்றச்சாட்டில் அவர் பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மட்டுமே தாம் மதித்து அதை பின்பற்ற நினைப்பதாக பிரிட்டன் வெளிவிவகார அமைச்சின் செயலர் வில்லியம் ஹோக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அசாஞ்சின் விவகாரத்தால் இங்கிலாந்து, சுவீடன் மற்றும் எகுவடோர் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இராஜதந்திர முரண்பாடை அடுத்து, தெ.அமெரிக்க நாடுகளான ஆர்ஜெண்டீனா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, குயானா, பரகுவே, பெரு, உருகுவே, சுரினாம் ஆகியவற்றுடன் எகுவடோர் நாட்டு பிரதிநிதிகள் சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்தி கலந்துரையாடியுள்ளனர்.

0 Responses to ஜூலியன் அசாஞ்சிற்கு புகலிடம் கொடுத்த எகுவடோர் மீது சுவீடன், பிரிட்டன் கடும் அதிருப்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com