Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டிலுள்ள புத்தி ஜீவிகள் விவசாயிகள், மின்சார சபை ஊழியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், அதன் பேராசிரியர்கள், சுகாதாரத்துறையினர் அனைவருமே மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்

நாட்டிலுள்ள அனைத்து மக்களின் பிரச்சினையாக காணிப்பிரச்சினை உள்ளது. கிழக்கு மாகாணத்திலும் கூட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் காணிப்பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர் ஆனால் அரசாங்கம் வெளிநாடுகளுக்கு காணிகளை வழங்கியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையிலுள்ள காணிகள் அமெரிக்காவுக்கு இலங்கை அரசாங்கத்தினால் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரர்களும் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவும் அமெரிக்காவின் பிரஜாவுரிமையையும் பெற்றுள்ளனர்’

அமெரிக்காவின் சி.ஐ.சி எனப்படும் நிறுவனத்திற்கு வாழைத்தோட்ட செய்கைக்காக 5000 மற்றும் 10000 ஏக்கர் வாழைத் தோட்ட காணிகளை வழங்கியுள்ளது.

இந்த காணிகளில் செய்யப்படும் வாழைப்பங்களை கூட இந்த நாட்டு மக்களால் சாப்பிடமுடியவில்லை. அதையும் கூட வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நீதிமன்றத்திற்கு கற்கள் வீசப்படுகின்றன. நீதித்துறை கூட அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றன
இதனால் சட்டத்தரணிகளும் வீதிகளில் இறங்கி போராடுகின்ற நிலைமை உருவாகியுள்ளது.

பொலிஸாருக்கு கூட அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்படமுடியாத நிலைமை இந்த அரசாங்கத்தின் ஆட்சியினால் ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

0 Responses to அனைவருமே மகிந்த அரசுக்கு எதிராக போராடுகின்றனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com