Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கருணாநிதியின் பேஸ்புக் உண்மை என்ன?

பதிந்தவர்: தம்பியன் 18 August 2012

திமுக தலைவர் கருணாநிதியின் பேஸ்புக் கணக்கு ஒரே நாளில் முடங்கிவிட்டதாக வதந்திகள் பரவியுள்ள நிலையில், அந்தக் கணக்கு 7,500 ஃபாலோயர்ஸுடன் நன்றாகவே இயங்கி வருகிறது.

சமூக வலைத் தளங்களில் திமுக குறித்து கடுமையான விமர்சனங்கள் இடம் பெற்று வருகின்றன.

ஆரம்பத்தில் அசட்டையாக இருந்த திமுக, இப்போது சமூக வலைத் தளங்களில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

பல ஆயிரம் திமுகவினர் தங்கள் சொந்தப் பெயர்களில், மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழகங்களின் பெயர்களில் பேஸ்புக் கணக்கை ஆரம்பித்து, திமுக எதிர்ப்பாளர்களை வெளுத்துக் கட்ட ஆரம்பித்துள்ளனர்.

இந் நிலையில்தான், திமுக தலைவர் கருணாநிதி ட்விட்டர், பேஸ்புக், யுட்யூப் போன்றவற்றில் கணக்கு தொடங்கி, திமுக மற்றும் தான் சம்பந்தப்பட்ட விஷயங்களை எழுத ஆரம்பித்தார். அவரது அறிக்கைகளும் இவற்றில் இடம்பெற்றன. நேற்று முரசொலி மாறன் பிறந்த நாளில் தனக்கான தனி இணையதளத்தையும் கருணாநிதி தொடங்கினார்.

இதற்கிடையே, கருணாநிதியின் பேஸ்புக் பக்கம் தொடங்கிய ஒரே நாளில் முடங்கிவிட்டதாக ஒரு வதந்தியை சிலர் கிளப்பிவிட்டனர். பேஸ்புக்கில் உள்ளவர்களின் எதிர்ப்பு மற்றும் கமெண்ட்களுக்கு பயந்து கணக்கை முடக்கி விட்டதாக செய்தியும் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் உண்மையில் 7500 ஃபாலோயர்ஸுடன் அவரது பக்கம் லைவாகவே உள்ளது. http://www.facebook.com/Kalaignar89 எனும் அந்த பக்கத்தில், நேற்று முரசொலி மாறன் பிறந்த தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செய்த படம் மற்றும் செய்தியையும் கருணாநிதி

0 Responses to கருணாநிதியின் பேஸ்புக் உண்மை என்ன?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com