Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர், இன்று போராட்டம் ஆரம்பித்த ஓராண்டு நினைவு நாளை இன்று மாலை கண்டனக் கூட்டமாக பதிவு செய்கின்றனர். இந்த கண்டன கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார்.

இடிந்தகரை மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் இன்று மாலை நடக்கவிருக்கும் கண்டனக் கூட்டத்தை ஒட்டி, மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கடந்த ஓராண்டாக அணு உலைக்கு எதிராக தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வரும் இவர்கள், போராட்டடம் ஆரம்பித்து ஓராண்டு ஆனதை ஒட்டி, அந்த நினைவு நாளை கண்டனக் கூட்டமாக பதிவு செய்ய உள்ளனர்.

இந்த கண்டனக் கூட்டத்தில் பங்கேற்கும் வைகோ இதுபற்றிப் பேசுகையில், "இந்தியாவில் 20 க்கும் மேற்பட்ட அணு உலைகள் இருக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்து மொத்தம் 2 . 7 சதவிகிதம் மின் உற்பத்திதான் நடக்கிறது. 1988 ஆம் ஆண்டு நவம்பர் 21 ம திகதி கூடங்குளம் அணுமின் நிலையம் துவங்க அறிவிப்பு வெளியிட்ட உடனேயே நாடாளு மன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தவன் நான். அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் முன்னிலையில் எதிர்ப்பைத் தெரிவித்தேன்.

கூடங்குளத்தில் அணு உலை துவங்கினால் தென் தமிழகமே அழிந்து விடும். அங்கு புல்பூண்டு கூட முளைக்காது. கூடங்குளம் சுற்றியுள்ள இடிந்த கரை உள்ளிட்ட சுற்றுவட்டார மீனவ கிராம மக்கள் சாதி, மத பேதம் கடந்து பட்டினி கிடந்து ஒரு வருடமாகப் போராடுகிறார்கள்.

நான் வேதனையுடன் ஆளும் கட்சியினருக்கும், ஆண்ட கட்சிக்கு, இன்னும் பிரதான கட்சிகளிடம் எல்லாம் கேட்டுக் கொள்கிறேன், கூடங்குளம் அணு உலை கூடாது என்று முடிவெடுங்கள். ஊடகங்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள். அணு உலை கூடாது, மூடப்படவேண்டும் என்பதே மதிமுக வின் உறுதியான கொள்கை. இதை அரசியலாகப் பார்க்காதீர்கள், சாதி மதம் கடந்து உயிரின் உரிமைக்காகப் போராடும் மக்களின் கோரிக்கையாகப் பாருங்கள்" என்கிறார் வைகோ.

0 Responses to கூடங்குளம் போராட்டக்குழு கண்டனக் கூட்டத்தில் பங்கேற்கிறார் வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com