Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அமைச்சரவையில் தற்போது சிறிய அளவிலான இலாகா மாற்றம் நடந்துள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை குறிப்பு தெரிவிக்கிறது.

பிரதமர் ஏற்படுத்தியுள்ள இத்தற்காலிக மாற்றத்தின் படி உள்துறை அமைச்சர் பொறுப்பை சுஷில்குமார் ஷிண்டேவுக்கும், சுஷில் குமார் வகித்த மின்துறையை வீரப்ப மொய்லிக்கு கூடுதல் பொறுப்பாகவும் பிரித்துக் கொடுத்துவிடப்பட்டுள்ளதாகவும், நிதி அமைச்சர் பொறுப்பு ப. சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், அதிகாரப் பூர்வத் தகவல்களாக குடியரசுத் தலைவர் மாளிகை தகவல் தெரிவிக்கிறது. தற்போது இச்சிறிய சிறிய அளவிலான இலாகா மாற்றம் போதும். அமைச்சரவை விரிவாக்கம் பற்றி செப்டெம்பரில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் காங்கிரஸ் தலைமை முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

மாவோயிஸ்டுக்கள் அச்சுறுத்தல், தேசிய அளவில் பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க முடியாமல் போனது. அசாம் இன மோதலை தடுக்க தவறியது என பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருவதாலும், தனிப்பட்ட முறையில் ஸ்பெக்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டிலும் குற்றம் சுமத்தப்படுவதாகவும் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சு பதவியில் நீடிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்தே அவரை நிதி அமைச்சராக அரசு நியமித்திருக்கலாம் என கூறப்படுகிறது. கனவு பட்ஜெட் நாயகன் என வட மாநிலத்தவரால் ப.சிதம்பரம் அழைக்கப்படுகின்றார். ஏற்கனவே இரு முறை நிதி அமைச்சராக இருந்துள்ள ப.சிதம்பரம், கடந்த சில வருடங்களாக இந்தியா சந்தித்து வரும் குறைவான பொருளாதார வளர்ச்சி வீதத்தை மீண்டும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பார் என தொழில் வர்த்தக துறையினர் எதிர்பார்த்துள்ளனர். இதே போன்று மின்சார துறை அமைச்சு பதவியிலிருந்து சுஷில் குமார் ஷிண்டே மாற்றப்பட்டதற்கும் அவர் அத்துறையில் திறம்பட செயற்படாமல் போனதே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து வீரப்ப மொய்லிக்கு மின்சாரத் துறை வழங்கப்பட்டுள்ளது. மொய்லி முன்னர் சட்ட அமைச்சராக இருந்தார். பின்னர் கம்பெனி விவகாரத்துறை அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மத்திய அமைச்சரவையில் சிறிய அளவிலான இலாகா மாற்றம் : நிதி அமைச்சரானார் ப.சிதம்பரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com