Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டென்மார்க்கில்  'தேசத்தின் குயில் 2012' விருதுக்கான தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி நிகழ்வு 29.09.2012 அன்று நடைபெறவுள்ளது.

 தேசத்தின் குயில் 2012' என்னும் தமிழீழ எழுச்சிப் பாடல் போட்டிக்கான தெரிவுகள் கடந்த 26. 08. 2012 அன்று டென்மார்க்கின் Ikast-Brande gymnasium, bøgildvej 2 7430 Ikast  என்னும் இடத்தில் நடைபெற்றது. தேசத்தின் குயில் 2012 தெரிவுப் போட்டிகள் டென்மார்க் கலைப் பண்பாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்டது. 07 அகவைக்கும் 12 அகவைக்கும் உட்பட்டோர் 'மழலையர் தேசத்தின் குயில்' விருதுக்கும், 13 அகவைக்கும் 18 அகவைக்கும் உட்பட்டோர் 'இளம்தேசத்தின் குயில்' விருதுக்கும், 18 அகவைக்கு மேற்பட்டோர் 'தேசத்தின் குயில்' விருதுக்குமாக போட்டித் தெரிவுகள் நடைபெற்றன.

இந்த தெரிவுப் போட்டியில் மழலையர், இளைஞர்கள், பெரியோர்கள் எனப் பலரும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டனர். இந்த பாடற்போட்டியில் 63 பேர் பங்குபற்றியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 29.09.2012 அன்று டென்மார்க்கின் Lundgardsskolen Herning என்னும் இடத்தில் 15:30 மணிக்கு 'தேசத்தின் குயில் 2012' விருதுக்கான தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி நிகழ்வு நடைபெறவுள்ளது.

இணைப்புக்கள்-படங்கள்
1.     'தேசத்தின் குயில் 2011
2.     தேசத்தின் குயில் 2012 தெரிவுப் போட்டிகள்

0 Responses to டென்மார்க்கில் 'தேசத்தின் குயில் 2012' விருதுக்கான தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி நிகழ்வு 29.09.2012 அன்று நடைபெறவுள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com