Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழர்கள் உலகம் முழுதும் பரவி வாழ்ந்தாலும் தமது உணவுர்கள் அனைத்தும் தாயகத்தை எண்ணியே துடிக்கின்றதுக்கு அமைவாக , 22 .09 .2012 அன்று சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்ற எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற பொங்குதமிழ் நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் உலகத்தமிழர்களின் ஒன்றுபட்ட உரிமைக்குரல் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அங்கு ஒலிக்கும் என்பதை பறைசாற்ற நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால்23 .09 2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு  "எமது நிலம் எமக்கு வேண்டும்" பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு  சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது .


அத்துடன்  தியாக தீபம் திலீபனின் 25வது ஆண்டு ஞாபகார்த்த நினைவு வணக்க  நிகழ்வும்  மற்றும் லெப் கேணல் சங்கர் ,அண்மையில் மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து தன்னைத்தானே ஈகம் செய்துகொண்ட தமிழீழ  உணர்வாளன் விஜயராஜ் அவர்களினது நினைவு நிகழ்வுகளும்  எழுச்சி பூர்வமாக நடைபெற்றது.





இந் நிகழ்வு பொதுச்சுடரேற்றல் தேசியக்கொடியேற்றல் ஈகச்சுடரேற்றல் அகவணக்கத்துடன்  ஆரம்பிக்கப்பட்டு  தியாகதீபம் திலீபனின் வரலாற்று பதிவு திரையில்  காண்பிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து  கவிஞர்  காசியானந்தனின் எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற காணொளியும்  திரையில் காண்பிக்கப்பட்டது  .





எமது நிலம் எமக்கு வேண்டும் மற்றும் விடுதலைப் போரிலே தங்கள் இன்னுயி
ர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களையும் நினைவு கூர்ந்து  உணர்வுமிக்க உரைகளும் பாடல்களும் கவிதைகளும் இடம்பெற்றன.

இறுதியாக தமிழீழத்தேசியக்கொடி இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை பாடி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என உறுதியோடு கூறி நிகழ்வு முடிவுபெற்றது .








 







"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் "

நன்றி

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -  நியூசிலாந்து

0 Responses to நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற "எமது நிலம் எமக்கு வேண்டும்" பொங்கு தமிழ் 2012 எழுச்சி நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com