உலகத் தமிழர்களின் விருப்பாகவும் ஈழத் தமிழர்களின்
அரசியல் அபிலாசையாகவும் உள்ள தமிழீழத்தினை அமைப்பதற்கான செயல்வழிப்பாதையினை
அமைக்கும் பணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேலவை ஈடுபடத்
தொடங்கியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த நா.த.அரசாங்கத்தின்
மேலவை உறுப்பினர்களின் முதலாவது கூட்டத்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன்
அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இச்செயல்வழிப்பாதைக்கான
திட்டவரைவொன்றினை உருவாக்கும் பணியில் மேலவை ஈடுபடத் தொடங்கியுள்ளது.
இன்றைய உலக, பொருளாதார, புவிசார் அரசியல் யதார்த்தங்களை கருத்தில் கொண்டு இந்த இத்திட்ட வரைவானது அமையவுள்ளதோடு, எதிர்கால முன்னெடுப்புகளும் அதற்கேற்ப அமையுவுள்ளது.
மேலும் மேலவையினால் உருவாக்கப்படும் செயல்வழிப்பாதைக்கான திட்டவரைவானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தினல் சமர்பிக்கப்படும்.
மேலவை உறுப்பினர்களின மத்தியில் உரையாற்றிய பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் மேலவை உறுப்பினர்களின் நியமனங்கள் தமிழர்கள் மத்தியில் பெருத்த ஆர்வத்தையும், மனஎழுச்சியையும் தோற்றுவித்திருந்ததோடு சிங்கள ஆட்சியாளர்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
மேலவையின் கூட்டத்தில் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் இனஅழிப்பு,அடக்குமுறை, மனிதஉரிமை மீறல்கள் பற்றி இந்தியா தென் ஆசியா பகுதிகள் உட்பட வெளிநாடுகளுக்குத் தெரிவித்து, இக்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இந்தியா பூராவும் பல்வேறு அகதிமுகாம்களில் பாதுகாப்புக் காரணங்களைகாட்டி தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகளைமேற் கொள்ளல், எனும் பல்வேறுவிடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
திருமதி உஷா சிறீஸ்கந்தராஜா மேலவைத் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் தனது உரையில் நம்பத்தகுந்த வகையில், மதிப்புமிக்க கண்ணியமான அமைப்பாக, மக்களாட்சி விழுமியங்களுக்கு இசைவாக வன்முறையற்ற அரசியல் செயல்பாடுகளை அர்ப்பணிப்போடு பணிபுரிந்து, புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருவலுவான மையமாக திகழவேண்டும் என்று குறிப்பிட்டார்.
சிறீலங்கா அரசாங்கம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை கண்டு அச்சங்கொண்டு அதன் நன்மதிப்பை குலைப்பதற்கு தளராதுசெயல்படும். அமைப்பைத் தடைசெய்யச் சொல்லி மற்ற நாடுகளிடம் ஆதரவுகோரவும் அது தயங்காது எனவும் அதனால் நாம் விழிப்புடன் செயல் படவேண்டும் எனவும் கூறினார்.
மேலவை உறுப்பினர்கள் மருத்துவர்கள், வழக்குரைஞர்கள்,மனிதஉரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பன்முகத் தளங்களைக் கொண்டவர்களாக உலகம் முழுவதிலும் நிறைந்து பரவி இருக்கின்றனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் ஒன்பது மேலவை உறுப்பினர்கள் நா.த.அரசாங்கத்தின் பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளதோடு மேலும் ஆறு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்பட்டவுள்ளனர்.
ஆயுட்காலம் மூன்றாண்டு ஆயுட்காலத்தினைக் கொண்ட நா.த.அரசாங்கத்தின் மேலவையானது, கட்டுப்படுத்தாத ஆலோசனைகளை மட்டுமே நா.த.அரசாங்கத்தின் நாடாளுமன்றத்திற்கு வழங்கமுடியும்.
மேலும் தொடர்புக்கு : மேலவைஉறுப்பினர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் ஜெயலிங்கம்
மேற்சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் :
1) திருவாளர் ராம்சி கிளார்க் : அமெரிக்காவின் முன்னை நாள் சட்டமா அதிபராவர் . அமெரிக்கச்சட்டத்திலும் அனைத்துலகச்சட்டத்திலும் துறைதோய்ந்த நிபுணனாகத் திகழ்ந்தவர். சளைக்காத ஒரு குடிசார் உரிமைகள் ஆர்வலர் என்று பெயரெடுத்தவர்.
கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சட்டவாக்கச் சாதனைகள் என்று கருதப்படும் வாக்குரிமைச் சட்டம்-1965, சமூக உரிமைகள் சட்டம்-1968 ஆகிய இரண்டையுமே உருவாக்கலிலும் நிறைவேற்றலிலும் முன்னின்று பணியாற்றிச்சரித்திரத்தில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர்.
அனைத்துத்தமிழராலும் உற்ற தோர் நண்பனாகக் கருதப்பட்டவர். எமது உரிமைகள் எப்போது சரி எங்கு சரி மீறப்படினும் தயங்காது எழுந்து நின்று குரல் தருபவர்.
2) கலாநிதி ப்ராயன் செனெவிரத்ன : ஒரு சிங்களக் குடிமகனான இவர் இலங்கையில் ஒரு மருத்துவப் பேராசிரியராகத் தொழில் புரிந்தவர்.
கடந்த 20 ஆண்டுகளாக உலகெங்கணும் சென்று பேரினவாத சிறிலங்கா அரசின் கீழ் தமிழர் படும் அல்லல்களைப் புட்டுக்காட்டிக் கொண்டிருப்பவர். சுpறிலங்காவின் மனித உரிமைகள் வதம் பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை வரைந்தவர். என்றென்றும் எமக்காக ஒலிக்கபோகின்ற குரல் இவரதாகும்.
3) கலாநிதி நாகலிங்கம் ஜெயலிங்கம் : ஒரு மருத்துவ ஆய்வாளர். இவர் மட்டுமன்றி இவரது முழுக்குடும்பமுமே தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்கள்.
(4) திரு. சத்யா சிவராமன் : ஒரு ஊடகவியலாளர் மட்டுமன்றி தெற்காசியாவில் மனிதஉரிமைகள் மற்றும் பொதுச்சுகாதாரம் பற்றிய ஒரு தொழிற்பாட்டாளருங்கூட. சிறிலங்காவின் மனித உரிமைகள் மீறல்களை வெளியுலகுக்குக் கொண்டுவந்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு.
5) திரு நடேசன் இழஞ்செழியன் : கல்லூரிப் பராயத்திலிருந்தே சமூகத்தில் நிலை குலைந்தவர்களின் வாழ்க்கைப்போராட்டத்தைத் தம்முடைய சமூக எழுச்சிப் போராட்டமாக மாற்றிக்கொண்டவர்; .அம்மாந்தர் வாழ்வின் கண்ணியத்தைக் காப்பதனையே தம்முடைய வாழ்வின் குறிக்கோளாக்கிக் கொண்டவர். ஐ.நாவிற்குப் பத்துலட்சம் கையெழுத்துக்கள் திரட்டும் பணியில் தம்மைப் பகலிரவாக அர்ப்பணித்தவர்.
6) திரு. ஞானேஸ்வரன : இலங்கையிலும் கனடாவிலும் பொறியியலாளராகப் பட்டயம் இவர் அறிந்தநாட் தொட்டு தமிழ் மக்கள் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். புலம்பெயர் சமூகத்தில் கருத்தொருமிப்பை நிறுவுவதற்குத் தம்மை முழுவதாக அர்ப்பணித்தவர்.
7) திருமதி உஷா சிறீஸ்கந்தராஜா : கனேடியத் தமிழர் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். ஈழத்தமிழர் பிரச்சினைகள் பற்றிப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதுவதன் மூலமே ஒரு புனித யுத்தத்தை நடாத்திக்கொண்டிருப்பவர்.
8) திரு சுப்பிரமணியம் இராஜரத்தினம் : புலம்பெயர் தமிழர் வாழ் உலகெங்கும் ஒருங்கிணைந்த தமிழ் மொழிக் கல்விக்கென்று தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர. அதற்கான நூலாக்கக்குழுவிலும் பெரும்பங்கு கொண்டிருந்தவர். சிறந்த எழுத்தாளரான அவருடைய பண்பாடு:வேரும் விழுதும் என்ற நூலானது தமிழ் நாட்டு அரசினால் சிறந்த நூலெனத் தேர்வு பெற்ற ஒன்று.
9) திரு. ஜெகன் நவரத்னம் மோகன் : தமிழீழச் சங்க மூலமாகவும் கனடியத் தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிறுவகம் மூலமாகவும் கனடியத் தமிழ் மக்களுக்கு அளப்பருஞ் சேவைகள் செய்த ஒரு மூத்தவழக்குரைஞரான இவர் புரியும் பல்தரப்பட்டபணிகளுக்காகவும் அவரின் தலைமைத்துவப் பண்புகளுக்காகவும் கனேடியப்பாராளுமன்றம வரைக் கௌரவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

0 Responses to தமிழீழத்திற்கான செயல்வழிப்பாதை: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேலவைப் பணியில்!