காஷ்மீர் சிறையில் பாகிஸ்தான் கைதி ஒருவர் இந்தியக் கைதிகளால் பலமாகத் தாக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இந்த நேரத்தில் அவரைப் பார்க்க, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியக் கைதியான சரப்ஜித் சிங் பாகிஸ்தான் கைதிகளால் தாக்கப்பட்டு, உயிரிழந்தமைக்கு பழிவாங்கும் விதத்தில், இந்த பாகிஸ்தான் கைதி தாக்கப்பட்ட சம்பவம் நடந்ததாகத் தெரிய வருகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் சண்டிகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார், பாகிஸ்தான் கைதி.
தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் கைதியைப் பார்க்க, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதுவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்பதும், அவர்கள் தாக்குதலுக்கு ஆளாகிய கைதியை பார்த்துவிட்டு தங்கள் நாட்டுக்கு கைதியின் தற்போதைய உடல்நிலை நிலை குறித்து, தகவல் கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஆனால் சரப்ஜித் சிங் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்த போது, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை என்பதும்,. சரப்ஜித் சிங் குடுமப்த்தினரே சரப்ஜித் சிங்கை ஜன்னல் வழியாகத்தான் பார்த்தார்கள் என்பதும் இந்நேரத்தில் குறிப்பிடத்தக்கது.
0 Responses to சண்டிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதியை பார்க்க அநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி!