பங்களாதேஷ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பல்லேகலையில் இன்று
நடைபெற்ற T20 உலக கோப்பை போட்டியில் பங்களாதேஷ் அணி போராடி தோல்வியை
தழுவியது. இதன் மூலம் பாகிஸ்தான் சூப்பர் 8 க்குள் நுழைவதை தடுக்க முடியாது
போய்விட்டது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 20 ஓவர்களில், 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 175 ஓட்டங்களை எடுத்தது. சகிப் அல் ஹசான் 84 ஓட்டங்களையும், கேப்டன் ரகீம், 25 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பந்துவீச்சில் யாசிர் அரபாத் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் சார்பில் ஆரம்ப வீரர்கள் ஹஃபீஸ் 45 ஓட்டங்களையும், இம்ரான் நசீர் 72 ஓட்டங்களையும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய நசீர் அஜ்மட் 29 ஓட்டங்களையும் கம்ரா னக்மல் 22 ஓட்டங்களையும் எடுத்தனர். இறுதியில் 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது பாகிஸ்தான் அணி.
இன்றைய போட்டியுடன் முதல் சுற்று போட்டிகள் யாவும் முடிவடைந்துள்ளன. நாளை மறுதினம், ஒரு சூப்பர் 8 போட்டி இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கும் இடையில் மற்றுமொரு சூப்பர் 8 போட்டி மே.இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலும் நடைபெறுகிறது.

0 Responses to பாகிஸ்தானுடன் போராடி தோற்றது பங்களாதேஷ்