Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் மகன் திலாவத் பூட்டோவுக்கும், பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஹீனா ரப்பானி காருக்கும் இடையில் காதல் மலர்ந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் திருமணம் செய்து கொண்டு, சுவிற்சர்லாந்தில் வாழ திட்டமிட்டு இருப்பதாகவும், எனினும் இதற்கு, சர்தாரி கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

   ஹீனா ரப்பானி ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்றாலும், இப்போது திலாவத் பூட்டோவைக் கரம் பிடிப்பதற்காக தனது முதல் திருமண வாழ்க்கையையும்  துறக்க முடிவெடுத்து விட்டதாகவும் கசிந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதனால் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்குள் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அக்கட்சியிலிருந்து திலாவத் பூட்டோ வெளியேற கூடும் எனவும் கூறப்படுகிறது.  ஹீனா ரப்பானி, திலாவத் பூட்டோவை விட 11 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தகது.

பங்களாதேசின் பிரபல செலிபிரிட்டி சஞ்சிகை இத்தகவலை முதன்முதலாக வெளியில் கொண்டுவந்துள்ளது.  சர்தாரி தற்போது இருவரின் காதலையும் பிரித்து வைக்க கடும் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அரசியல் ரீதியாக தனக்கு பலத்த அவமானத்தை இது தேடித்தரும் என அவர் பிலாவல் பூட்டோவுக்கு எசரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இளம் தலைவருக்கு ஹீனா ரப்பானி தனது கைப்பட எழுதியுள்ள கடிதம் ஒன்றில், தானும், பூட்டோவும் விரைவில் ஒன்றிணைய போவதாகவும், அதன் பின்னர் தாங்கள் தங்களுக்காக வாழப்போவதாகவும் தெரிவித்துள்ளதாகவும், மற்றுமொரு தகவல் தெரிவிக்கிறது.  இது ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு மிகப்பெரும் ஒரு அரசியல் சர்ச்சையை ஏற்படுத்திவைக்க போகும் விவகாரம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

0 Responses to ஹீனா ரப்பானி - திலாவத் பூட்டோ காதலா? : பாகிஸ்தான் அரசியலில் புதிய சர்ச்சை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com