Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஐ.நா உரையை கடுமையாக விமர்சித்துள்ளார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்.
அமெரிக்க அதிபர்களிலேயே கடுமையான சமூகவிரோத போக்குடன் உரை நிகழ்த்தியவர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவாகத்தான் இருக்க முடியும். மத்திய கிழக்கு நாடுகளின் பேச்சுரிமையை அவர் மதிப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் விக்கிலீக்ஸ் ஊடாக பேச்சு உரிமையில் தகவல் வெளியிட்டவர்களுக்கு தொடர்ந்து துன்புறுத்தல் விடுத்து வருகிறார்கள். எகிப்திய புரட்சியின் போது ஆர்ப்பாட்டகாரர்களின் பேச்சுரிமையை அடக்குவதற்கு அமெரிக்கா நடத்திய கண்ணீர் புகை தாக்குதலில் கண் கலங்கிய எகிப்திய இளைஞர்களுக்கு ஒபாமாவின் தற்போதைய உரை ஆச்சரியமளிக்க கூடும். ஒபாமா தனது பேச்சுக்களை மிக கவனமாக கையாளவேண்டிய நேரமிது என அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள எகுவடோர் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள அசாஞ்சே அங்கிருந்துகொண்டு வீடியோ பதிவு ஒன்றின் ஊடாக இத்தகவலை வெளியிட்டுள்ளார். இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டமைக்கு, கண்டம் தெரிவித்து மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளில் 4 அமெரிக்கர்கள் உட்பட 20க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதில் லிபியாவுக்கான அமெரிக்க தூதரும் கொல்லப்பட்டார். இந்நிலையிலேயே இவ்வன்முறைகளுக்கு கடும் கண்டனம் விடுத்து ஐ.நாவில் ஒபாமா உரை நிகழ்த்தினார்.

0 Responses to ஒபாமாவின் ஐ.நா உரையை கடுமையாக விமர்சிக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com