Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது?

பதிந்தவர்: ஈழப்பிரியா 25 September 2012

திமுக தலைவரான கருணாநிதிக்கு இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை திமுக தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசும் இது குறித்து பரிசீலிக்க வாய்ப்புள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாழ்வில் விரைவில் வைரவிழா காண உள்ள அவரது பொது வாழ்க்கை சேவைக்காக கருணாநிதிக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று திமுக தரப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக தரப்பில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், இது குறித்து மத்திய அரசின் குழுதான் பரிசீலித்து முடிவெடுக்கும்.

சமீபத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து மம்தா பானர்ஜி விலகி உள்ள நிலையில், இதர கூட்டணிக்கட்சித் தலைவர்களை தக்கவைத்துக்கொள்வதில் காங்கிரஸ் மேலிடம் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது.

அத்துடன்,  தமிழக மீனவர் பிரச்சினை, ராஜபக்ச வருகை உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய அரசு மீது கருணாநிதி வெளிப்படையாகவே அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில்,அவரை சமாதானப்படுத்த திமுகவின் பாரத ரத்னா விருது கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கவும் வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com