Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் அம்மா மலிவு விலை உணவகம் போல உத்திரகாண்டில் இந்திரா காந்தி மலிவு விலை உணவகம் மாநிலம் முழுவதும் இயங்க உள்ளது.

தமிழகத்தில் சென்னையின் பல்வேறு இடங்களிலும் மற்றும் மாநில அளவில் முக்கிய நகரங்களிலும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சாம்பார் சாதம் 5 ரூபாய் என்றும் கறிவேப்பிலை சாதம், தயிர் சாதம் 3 ரூபாய் என்கிற விலையிலும் விற்கப்படுகிறது.ஒரு இட்லி 2 ரூபாய், ஒரு சப்பாத்தி இரண்டு ரூபாய், வெண் பொங்கல் 3 ரூபாய் என்று விற்கப்படுகிறது. இதே போன்று கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் உணவகங்கள் தொடங்கப்பட அம்மாநிலங்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், உத்திரகாண்ட் மாநிலத்தின் ஒரு நகரில் மட்டுமே சோதனைக்காக இப்படி மலிவு விலை உனவகம் இந்திரா காந்தி போஜனா என்கிற திட்டத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து மாநிலம் முழுவதும் இத்திட்டத்தைத் துவங்கி  மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி காய்கறிகள், பருப்பு இவைகள் அடங்கிய சாம்பார் சாதம், சப்பாத்தி உள்ளிட்ட கோதுமை உணவுகளும் அங்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் தெரிய வருகிறது.

0 Responses to தமிழகத்தின் அம்மா உணவகம் போல உத்திரகாண்டில் இந்திரா போஜனா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com